மதுரை மாநகர்
மதுரை விளாங்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. – கணக்கில் வராத 1.90 லட்சம் பணம் பறிமுதல்.
மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரர்கள் வைத்து பதிவு நடைபெறுவதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துணை கண்காணிப்பாளர் சதீஷ் சீலன் தலைமையிலான குழுவினர் விளாங்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை.
3 மணி நேரமாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சார் பதிவாளர் மற்றும் கணினி உதவியாளர் இடைத்தரகர்களிடம் விசாரணை.
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் சார்பதிவாளர் வீரக்குமரன் அறையிலிருந்து கணக்கில் வராத 1.90 லட்சம் பணம் பறிமுதல்.
தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலர் வீரக்குமரன் மற்றும் 3 இடைத்தரகர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.