Police Department News

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கூட்ட நெரிசலில் இறந்ததாக வெளிவந்த தவறான செய்திக்கு காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு

கடந்த 12ஆம் தேதி அதிகாலையில் சித்திரை திருவிழாவில் மிக முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கண்டு களிப்பதற்காக முக்கிய நபர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையுடன் ( V.I.P பாஸ்.) திருநெல்வேலி மாவட்டம் தாழையுத்து முத்தையா நகரில் வசித்து வரும் செல்லையா பாண்டியன் என்பவரது மகன் பூமிநாதன் வயது 64 என்பவர் அவரது மனைவி இந்திரா மற்றும் இரண்டு உறவினர்களுடன் 12/05/2025 அன்று காலை 4.05 மணியளவில் முக்கிய நபர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்திருந்த போது உடல்நிலை சரியில்லாமல் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கம் அடைந்ததாக உறவினர்கள் தெரிவித்ததின் பேரில் உடனடியாக 4.10 மணி அளவில் வைகை ஆற்றில் உள்ளே தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து செல்லப்பட்டு தேனி ஆனந்தம் கட்டிடத்தில் இயங்கி வந்த சிறப்பு மருத்துவ குழுவினரால் முதலுதவி செய்யப்பட்டு பிறகு அங்கிருந்து ஆம்புலன்ஸ் செல்வதற்காக என பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டு இருந்த வழியாக தேனி ஆனந்தா மூங்கில் கடை தெரு கோரிப்பாளையம், பனகல் ரோடு ரோடு வழியாக ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் மேற்படி நபர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இறந்த பூமிநாதன் என்பவருக்கு ஏற்கனவே இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டும் பின்பு இருதய அறுவை சிகிச்சையும் செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது இறப்பு தொடர்பாக இறந்த நபரின் மனைவி இந்திரா என்பவர் கொடுத்த புகாரியின் பேரில் E 2 மதிச்சியம் காவல் நிலைய குற்ற எண்195/25, u/s 194 BNSS ன் படி வழக்கு பதிவு செய்து பிரேத விசாரணைக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்வதற்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது நாளிதழ்களில் மேற்படி தகவலை மறைத்து திருவிழா கூட்ட நெரிசலில் இறந்ததாக தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளது எனவே மேற்படி இறந்த நபர் பூமிநாதன் என்பவர் ஏற்கனவே இருதய நோயினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இருந்துள்ளார் என்பதும் எவ்விதத்திலும் அவர் கூட்ட நெரிசலில் இறக்கவில்லை என்பதும் அவர் உடனடியாக தயார் நிலையில் இருந்த மருத்துவக் குழுவினர் மூலம்முதலுதவி அளிக்கப்பட்டு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published.