
மதுரையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட முதியவருக்கு காவல்துறையினர் உதவி
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், காவல் ஆணையர் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் படி, மாட்டுத்தாவணி MGR பேருந்து நிலைய பகுதியில், உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த திரு.பிரதாப் என்கிற முதியவரை குழந்தைகள் மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு (AHTU) காவல் ஆய்வாளர் அவர்கள் தலைமையிலான “காவல் கரங்கள்” அமைப்பைச் சேர்ந்த காவலர்கள் மீட்டு முதலுதவி அளித்து, மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பிற்காக சிம்மக்கல் பகுதியில் உள்ள ரோஜாவனம் காப்பகத்தில் சேர்த்து உள்ளனர். பாதிக்கப்பட்ட முதியவருக்கு உதவிய காவல் ஆணையர் அவர்கள் மற்றும் காவல் கரங்கள் அமைப்பை சேர்ந்த காவலர்களின் செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
மதுரை மாநகர காவல் கரங்கள் அமைப்பின் இலவச தொலைபேசி எண்: 1800-8892-098, 6369860806
