Police Department News

காவல் துறையில் சிறப்பு எஸ்.ஐ.,பதவி ரத்து செய்யப்பட வேண்டும்

காவல் துறையில் சிறப்பு எஸ்.ஐ.,பதவி ரத்து செய்யப்பட வேண்டும்

காவல்துறையில் சிறப்பு எஸ்.ஐ., என்னும் பதவி ரத்து செய்வதன் மூலம் எஸ்.ஐ., என அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடைக்கும் என தூத்துக்குடியிலுள்ள தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறை நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
சங்க நிர்வாக குழு கூட்டம் தூத்துக்குடியில் ஆலோசகர் ஜாய் ஐசக் பாண்டியன் அவர்களின் தலைமையில் நடந்தது. மூத்த உறுப்பினர் செந்தட்டி, சங்கத்தலைவர் ஜெபமணி முன்னிலையில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடந்தது. வழக்கம் போல் தமிழக முதல்வருக்கு பாராட்டு ,நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் குறை நிவர்த்தி செய்ய தீரமானம் என்ற வகையில் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் 10 ஆயிரம் சிறப்பு SI கள் உள்ளனர்.இப்பதவி தமிழ்நாடு காவல்துறை சார்நிலைப் பணிகளின் சிறப்பு விதிகள் இல்லை.என்றும், சம்பளமே வேறு விதிகளின்படி வழங்குவதாக உயர் அதிகாரிகளின் கடிதங்களின் மூலம் தெரியவந்தது சிறப்பு எஸ்.ஐ.,கள் எந்த பதவியில் உள்ளனர் என்று அதிகாரபூர்வமாக கூற முடியாத அவல நிலை உள்ளது.இதனை உயர் அதிகாரிகள் தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வில்லை.

மேலும் சிறப்பு எஸ்.ஐ., களை தலைமை காவலர்களாகத்தான் கருதுவார்கள். என உயர் அதிகரிகள் எழுத்து பூர்வமாக தெரிவித்துள்ளனர். இதற்கு ஒரே தீர்வு சிறப்பு எஸ்.ஐ., என்ற பதவியை ரத்து செய்து, எஸ்.ஐ. என அறிவிப்பதால் அரசுக்கு எந்த வித இழப்பும் இல்லை.

நிர்வாக வசதிக்காக நேரடி எஸ்.ஐ., களை நம்பர் 1, 2 எனவும் போலீசாக இருந்து பதவி உயர்வு பெறும் எஸ்.ஐ., களை நம்பர் 3, 4 என பிரித்து நியமனம் செய்கின்றனர், இது தவறு என சொல்லவில்லை, சிறப்பு எஸ்.ஐ., களுக்கு மூப்பு அடிப்படையில் உரிய பயிற்சியளித்து 40 சதவித அடிப்படையில் ரெகுலர் எஸ.ஐ., என்ற பதவிக்கு நியமனம் செய்து கொள்ளலாம். சிறப்பு எஸ.ஐ., என்ற பதவியை ரத்து செய்வதன் மூலம் அவர்களுக்கு எஸ.ஐ., என்ற அங்கீகாரம், மற்றும் கெளரவம் கிடைக்கும்.

தமிழக முதல்வராக கருணாநிதி அவர்கள் இருந்த போது 1998 ல் எஸ.எஸ.ஐ., என அரசாணை பிறப்பித்தார். இதனை உயர் அதிகாரிகள் நெறிமுறை படுத்தாதே தற்போதைய நிலைக்கு காரணம்.என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published.