
மதுரையில் மாபெரும் பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நிகழ்வு
மதுரை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 09/04/2025 ம் தேதி 41,70,000/- மதிப்புள்ள 278 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக இன்று 06/08/2025 ம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறை தீர்ப்பு முகாமில் கோவில் சரகம் 28, திருப்பரங்குன்றம் சரகம் 31, தெற்கு வாசல் சரகம் 4, அவனியாபுரம் சரகம் 6, திடீர் நகர் சரகம் 48, திலகர் திடல் சரகம் 54,. தல்லாகுளம் சரகம் 103, செல்லூர் சரகம் 2, அண்ணாநகர் சரகம் 23, செல்போன்கள் என ரூபாய் 44,85,000/- மதிப்புள்ள 299 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியானது மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .
மதுரை மாநகரில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு சைபர் கிரைப் போலீசாரின் தொடர் முயற்சியினாலும் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு 2025 ம் ஆண்டில் தற்போது வரை 86,55,000/- ரூபாய் மதிப்பிலான 577 செல்போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஆணையர்கள் தெற்கு ,வடக்கு, போக்குவரத்து, தலைமையிடம், மற்றும் ஆயுதப்படை மற்றும் அனைத்து சரக காவல் உதவி ஆணையர்கள் அனைத்து காவல் நிலைய காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிக்க போதிய முயற்சிகள் மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் வெகுவாக பாராட்டினார்.
