
குறள் : 15
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.
மதுரை திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு தங்கமணி அவர்கள் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் சார்ந்த விழிப்புணர்வு செய்யும் சமயம் ஒவ்வொரு முறையும் திருக்குறள் பற்றி மாணவர்களிடம் கேள்விகள் கேட்பது வழக்கமாக வைத்துள்ளார் திருக்குறளில் மொத்தம் 1330 குறளும் தெரிந்தவர்கள் யார் என்றும், 133 குறள் தெரிந்தவர்கள் யார் என்றும், பின்பு 13 குறள் தெரிந்தவர்கள் யார் என்றும் கேள்விகள் கேட்பது வழக்கம் ஆனால் அவருக்கு மாணவர்கள் கொடுக்கும் பதில் திருப்தியாக இல்லை மாணவர்கள் அனைவரும் திருக்குறள் படிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் இலவசமாக வழங்கினார் இந்த செயல் என்னை மிகவும் கவர்ந்தது எனது பங்கிற்கு நான் தினசரி ஒரு திருக்குறளை பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புகிறேன்
அதன் வெளிப்பாடு தான் இந்த தினம் ஒரு திருக்குறள்
