Police Recruitment

சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்.

சமூக பாதுகாப்பு தலைமை விருது பெற்றவர், ராமநாதபுரம், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்.

தமிழ்நாடு காவல்துறையில் ராமநாதபுரம், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும், சுபாஷ் சீனிவாசன் அவர்கள்,
தனது ஓய்வு நேரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரித்து வருகிறார்.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு மரக்கன்றுகள் நட்டு மகளிர்க்காக ஒரு பூங்காவையே உருவாக்கி பொது மக்களின் பாராட்டைப் பெற்றவர்.

மேலும் சாலையோரம் மரங்களில் விளம்பரப் பலகைகளை ஆணியடித்து மாட்டுவது தவறு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அல்லாமல்
இருநூற்று ஐம்பது கிலோ ஆணிகளை அகற்றி ஆணி மனிதர் என்ற பெயரையும் பெற்றவர் சுபாஸ் சீனிவாசன் அவர்கள்.

தொடர்ச்சியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
சமூக அமைப்பிலான பாதுகாப்பு முயற்சிகள். வனவிலங்குகளை பாதுகாத்தல்.
பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல் மற்றும் நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகளை மேம்படுத்துதல் , ஆகியவற்றில் தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக அவரது பசுமை சார்ந்த பணிகளை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்சிங் கலோன் அவர்கள் சுபாஷ் சீனிவாசன் அவர்களுக்கு இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது வழங்கினார்.

இந்நிகழ்வில் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் அகில் தம்பி, கூடுதல் ஆட்சியர் திவ்யான் ஷூநிகம், மீன் வளத்துறை துணை இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் கோபிநாத், வனச் சரகர் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.