Police Department News

தூத்துக்குடி மாவட்டம் மேல்நிலைப்பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையில் பணியாற்றி வரும்

தூத்துக்குடி மாவட்டம் மேல்நிலைப்பள்ளி படிப்பில் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற காவல் துறையில் பணியாற்றி வரும் வாரிசுகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் வழங்கினார்.

தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் காவல்துறையினரின் குழந்தைகள் மேல்நிலைபள்ளிப்படிப்பில் மாநில அளவில் முதல் 100 இடங்களை பிடித்துள்ளவர்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து, அவர்களின் உயர் கல்விக்கு படிப்பு முடியும் வரை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு கல்வி உதவித் தொகையாக ரூபாய் 25,000/- வரை வழங்கப்படும்.

இந்த 2019-2020ம் ஆண்டுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றிவரும் உதவி ஆய்வாளர்கள் ஜார்ஜ் லிவிங்ஸ்டன் மகள் ஜில்பின் லிஜோ, சக்திவேல் மகன் கார்த்திக் ராஜா, விஜயகுமார் மகள் சபரிதா, அனைந்தபெருமாள் மகன் சுரேஷ்குமார், ஜெயராமசுப்பிரமணியன் மகன் பாலசுப்ரமணியன், ராஜ்குமார் மகள் நிவேதா, தலைமைக் காவலர்கள் கண்ணன் மகள் சிதம்பர செல்வி, காவல் துறை அமைச்சு பணி கண்காணிப்பாளர்கள் சுப்பிரமணியன் மகன் ஆதிபிரகாஷ், நம்பிராஜன் மகன் லோகேஷ், இந்திரா காந்தி மகள் ரமலி ராமலெட்சுமி, உதவியாளர் கிருஷ்ணம்மாள் மகன் பிரசாந்த் மாரியப்பன் ஆகியோருக்கு சிறப்பு கல்வி உதவித் தொகையை இன்று(14.01.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் வழங்கி, அவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார், அலுவலக கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர். ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.