குடும்ப பிரச்சனை காரணமாக ஒருவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ₹10,000/- அபராதம் பெற்றுத்தந்த தேனி மாவட்ட காவல்துறையினர்.
தேனி மாவட்டம் 31.01.2020 போடி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு குடும்ப பிரச்சினை காரணமாக முருகன்(57) என்பவர் ராமர் என்பவரை கொலை செய்ததாக இறந்தவரின் தம்பி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்
பிரிவு 341,294(b),302 IPC r/w 109 IPC -ன் கீழ் வழக்கு பதிவு செய்து முருகன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில்
31.01.2020-ம் தேதி தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இறுதி விசாரணை முடிவில் நீதிபதி திரு.A. அப்துல்காதர்,BA BL ., அவர்கள்
முருகன் என்பவரை குற்றவாளி எனக் கூறி
கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு வருட சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறி தீர்ப்பளித்தார்.
மேலும் இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், நீதிமன்ற காவலர் மற்றும் அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி, IPS., அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.