Police Department News

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தில் விதி மீறும் கனரக வாகனங்களின் டிரான்ஸ்போர்ட் வாகனங்களை சிமெண்ட் ஆலை நிறுவனங்களில் இயக்க அனுமதிக்க மாட்டோம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்களிடம் சிமெண்ட் ஆலை அலுவலர்கள் உறுதியளித்தனர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R. ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் 13/02/2020 அன்று சாலை பாதுகாப்பு சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிமெண்ட் ஆலைகளிலும் இயங்கும் கனரக வாகனங்கள் அனைத்தும் சாலை விதிகளை மதித்து அதிவேகமாக சென்று ஓவர்டேக் செல்வதை முற்றிலுமாக கட்டாயம் தவிர்க்க வேண்டும். அனைத்து சாலைகளிலும் சிமெண்ட் ஆலை நிறுவனங்கள் மொபைல் செக்கிங் அமைத்து கனரக வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அனைத்து கனரக வாகனங்களிலும் CCTV CAMERA – கள் கட்டாயம் பொருத்தவேண்டும். கனரக ஓட்டுநர்களுக்கு தினமும் சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்க வேண்டும். சிமெண்ட் தொழிற்சாலை கனரக வாகன ஓட்டுநர்கள் அதிவேகமாகச் முந்திச் சென்று சாலை விதிகளை மதிக்காமலும் சென்று விபத்து ஏற்படுத்தும் வாகனத்தினால் அந்த டிரான்ஸ்போர்டில் இயங்கும் அனைத்து கனரக வாகனங்களும் சிமெண்ட் ஆலைகளில் இயக்க அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார்கள். இதனை ஏற்ற சிமெண்ட் ஆலை அலுவலர்கள் விதி மீறும் வாகனங்களை சிமெண்ட் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி அளித்தனர். மேலும் சர்க்கரை ஆலை அலுவலர்களிடம் கரும்பு ஏற்றிச்செல்லும் டிரக்டர்கள் டபுள் ட்ரேக்கர் வைத்து அதிக பாரம் ஏற்றி செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து சிமெண்ட் தொழிற்சாலை அலுவலர்களும் கோத்தாரி சர்க்கரை ஆலை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.