Police Department News

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய தம்பதியை மீட்டு மருத்துவமனை கொண்டு சேர்த்த மாவட்டக் கண்காணிப்பாளர்

விழுப்புரம்: கடந்த 22.12.2017 அன்று இரவு மாரிமுத்து மற்றும் அவரது மனைவி இருசாயி ஆகியோர் தங்கள் இரு சக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியிலிருந்து மூரார்பாளையம் நோக்கி செல்லும் வழியில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்து காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் சங்கராபுரம் காவல்நிலையத்தில் ஆய்வு முடித்து விட்டு அவ்வழியாக காரில் வந்து கொண்டிருந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ளு.ஜெயக்குமார் அவர்கள், விபத்து குறித்து விசாரித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தம்பதியை உடனடியாக தனது காரில் ஏற்றிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். காலங்கருதி செய்த உதவிக்காக மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ளு.ஜெயக்குமார் அவர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.