Police Department News

ரூ.20 டோக்கன் விவகாரம்: கொருக்குப்பேட்டையில் நடந்த மோதலில் 4 பேர் கைது

ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்து தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் வரை கொடுக்க திட்டமிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் ஜான்பீட்டரிடம் (35) சென்று, தங்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கிடைக்கவில்லை என கூறியுள்ளார். இதையடுத்து, ஜான் பீட்டருடன் சரண்ராஜ் (20), செல்வம் (39), ரவி (40) ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். காயம் அடைந்த கார்த்திகேயன்ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். அவர்கள் தினகரன் ஆதரவாளர்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.