Police Department News

கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு இலவச உதவிகள்…

விருதுநகர் மாவட்ட செய்திகள்:-

கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக
மல்லாங்கிணறு காவல் நிலையத்திற்குட்பட்ட கிராம மக்களுக்கு இலவச உதவிகள்…

நாடுதோறும் தமிழகம் முழுமையும் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், ஊர்களில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவித நிகழ்விற்கும்,
ஒவ்வொரு பிரச்சினைகளுக்கும் காவல் துறையைச் சேர்ந்தவர்களுக்கு தீர்வுகாண்பதே மிகப்பெரிய பொறுப்பாக இருந்துவருகின்றது,இவர்களைப்போலவே
மற்ற ஏனைய அரசு ஊழியர்கள் இருந்தாலும் அவர்கள் கடமையை கடமைக்காக மட்டுமே செய்ய முடியும் அவ்வளவேதான் செய்யஇயலும் அது அவர்களின் தவறல்ல அது அவர்களின் நிலை (எல்லை வரையறை).
ஆனால்
காவல்துறைக்கு மட்டும்தான் அத்தனை பொறுப்புகளும் உள்ளடங்கியுள்ளன எல்லையில்லை , வரையரையில்லை, பொறுப்புகள் அதிகம்

நாம் அன்றாடம் பருகும் குடிநீர் பிரச்சினையாக இருந்தாலும்,
சாலைகள் சரியாக போடப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தாலும்,
பொது போக்குவரத்துப் பிரச்சினை என்றாலும்,
நியாயவிலை கடையில் விலையில்லா அரிசி கொடுத்து வாங்குவது என்றாலும்,அரசியல் மிகமுக்கிய பிரமுகர்கள்,
தலைவர்கள், வருவதென்றாலும்,
கோயில்களில் முக்கிய திருவிழாக்கள் கொண்டாடுவது என்றாலும்,
இன்னும் பல உள்ளன. இதற்கென தனியாக துறைகள் இருந்தாலும் அவர்கள் கடமையை ஆற்றும் போது
காவல்துறை ஒன்று மட்டுமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு ,
அதை சிறப்புடன் செய்ய உறுதியாய் நிற்கின்றார்கள் என்றால் அது மிகையாகாது,

அப்படியிருக்க நமது தமிழகத்தில் உள்ள கிராமங்களில் மனிதர்களை வயது வித்தியாசமில்லாமல் இந்த கொரோனா வைரஸ் தொற்றுக் கிருமி பரவுவதை தடுக்க அரசானது Crpc144 தடை உத்தரவு போட்டு மக்களைப் பாதுகாத்துக்கொண்டு வருகிறது,
இதனால் தினசரிகூலி வேலை செய்துபிழைத்து வரும் பெரும்பான்மையான மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியும்,மனவேதனையில் உள்ளனர்.
அவர்களை காக்கும் பொருட்டு தமிழககாவல்துறை சில உதவிகளை செய்ய காவல்துறை தன்னை,தானே தயார் செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் இது …
அனைவருக்கும் விலையில்லா அரிசி தமிழக அரசால் தற்போது கொடுக்கப்பட்டுவருகின்றது,
ஆனால்
அவர்களுக்கு மளிகை சாமான்கள் மற்றும் காய்கறிகள்
கிடைப்பதிலோ அல்லது வாங்குவதிலோ
மிகுந்த சிரமத்தில் உள்ளனர்.
இந்நிலையில் காவல்துறையால் முடிந்த அளவு முற்றிலும் வசதியற்ற,திக்கற்றோருக்கும், உடல்நிலை பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ரூபாய் 700 மதிப்புள்ள காய்கறிகள் மற்றும் மளிகை சாமான்கள் அவர்களின் வீடு தேடி கொடுக்க தயாராகி வருகிறார்கள்.
அதில் நம்முடைய காவல்துறையில் உள்ள ஒவ்வொருவரின் பங்களிப்பு அவசியம் இருக்க வேண்டுமென அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கிணர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் சக காவலர்கள் தங்களது உணவுப்படியில் இருந்து
ஏழைகள் உயிர் வாழ ஒரு பிடி… அளித்துள்ளார்கள் அவை பின்வருமாறு…

1.துவரை 1/2 கிலோ
2.பாசி பருப்பு 1/2 கிலோ
3.உளுந்தம் பருப்பு 1/2 கிலோ
4.புளி 1/4கிலோ
5.வெள்ளைப்பூண்டு 100 கிராம்
6.மிளகு 25 கிராம்
7.சீரகம் 25 கிராம்
8.கடுகு 25 கிராம்
9.மஞ்சள் 25 கிராம
10.எண்ணெய் அரை லிட்டர்
11.தக்காளி 1 கிலோ
12.கத்தரிக்காய் அரை கிலோ
13.வெங்காயம் ஒரு கிலோ
14.வெண்டைக்காய்

  1. பச்சைமிளகாய்
    16.வாழக்காய் -2

இவைகள் அடங்கிய தொகுப்பினை அளிக்க உள்ளார்கள் அவர்களின் பணி சிறக்கவும் மென்மேலும் மிளிரவும் நல்வாழ்த்துக்கள்

VRK.ஜெயராமன் MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை 626101,விருதுநகர் மாவட்டம்

Leave a Reply

Your email address will not be published.