Police Department News

மதுரை, தெற்கு வாசல், NMR பாலத்தின் அடியில், வாய்தகராறினால் நண்பரை கொலை செய்தவர்

மதுரை, தெற்கு வாசல், NMR பாலத்தின் அடியில், வாய்தகராறினால் நண்பரை கொலை செய்தவர்

மதுரை, நகர் மேல்மதுரை கிராமம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர் திரு.பாண்டி அவர்கள், இவர் கடந்த 12 ம் தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் அலுவல் சம்பந்தமாக தெற்கு வெளி வீதியில் உள்ள அலுவலகத்தில் இருந்த போது தனக்கு கிடைத்த தகவலின்படி NMR பாலத்தின் அடியில் சென்று பார்த்த போது அங்கு சுமார் 60 வயது மதிக்கதக்க ஆண் நபர் வாய் மற்றும் காது, மூக்கு வழியாக ரத்தம் வழிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது பெயர் விலாசம் மற்ற விபரங்கள் தெரியவில்லை என்றும் இறந்து போனவரின் பெயர், மற்றும் விலாசம் தெரியாத ஆண் பிரேதத்தின் உறவினர்கள் யார் என்பதை கண்டுபிடித்தும் இறந்தவரின் இறப்பின் தன்மை பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க 13/09/2020 ம் தேதி இரவு 12.30 மணிக்கு தெற்கு வாசல் B5, காவல் நிலையம் வந்து புகார் அளித்தார், புகாரை ஏற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்கள் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. S.வன்னியன் அவர்கள் குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 174 ன்படியும் (Suspicious death) இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 302 படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள், இதற்கிடையில், கிராம நிர்வாக அதிகாரியான திரு. பாண்டி முன்பு குற்றவாளியான மதுரை, மீனாம்பாள்புரம், சத்தியமூர்த்தி தெரு 3 வது தெருவை சேர்ந்த காதர் மகன் முகமது ஆபி வயது 45/2020, நேரில் ஆஜராகி அவர் கொடுத்த வாக்குமூலத்தில் இறந்து போனவருக்கும் , முகமது ஆபிக்கும் ஏற்பட்ட வாய்தகராறில் அருகில் கிடந்த கல்லை எடுத்து இறந்து போன நபரின் தலையில் தாக்கியும், நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டதில் இறந்து போன நபர் மல்லாந்த நிலையில் விழுந்து அதனால் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதன் காரணமாக அவர் இறந்துள்ளார், என்பது தெரிய வந்தது. எனவே எதிரி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கை 14 ம் தேதி எதிரியை கைது செய்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது, அதன்பின் எதிரியை நீதி மன்றத்தில் ஆஜர் செய்து, நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.