Police Recruitment

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பயணங்களை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால்
இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பயணங்களை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர்
ஆனாலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களுக்கு அரசு தரப்பிலும் பிரபலங்கள் தரப்பிலும் கொரோனா குறித்தவிழிப்புணர்வு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் பாடல்கள் என பல்வேறு வித்தியாசமான பல முறைகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள் அதன் வரிசையில்
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி அவர்கள் உலகை அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து நம்மையும் நம்மைச் சுற்றி உள்ளவர்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், காவலர் நண்பர் குழு, குடியிருப்போர் சங்கத்தினர், தன்னார்வலர்கள் ஆகியோரை ஆயுதப்படை மைதானத்தில் அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் எவ்வாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கலந்துரையாடினார்.

ஒவ்வொரு பகுதியிலும் காவலர், தன்னார்வலர், காவல் உதவி நண்பர், நகராட்சி ஊழியர் என தலா ஒருவரும் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு நபரையும் சேர்த்து ஒரு குழுவை உருவாக்கி பொதுமக்களுக்கு கொரனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்

மேலும்
சமூக சேவை பணியில் ஈடுபடும் அனைவருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நன்றியை தெரிவித்து பாராட்டியபோது அனைவரும் நெகிழ்ந்தனர்

முக கவசம் கையுறை மற்றும் சமூக இடைவெளி ஆகியவைகளை கடைப்பிடித்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது

காஞ்சிபுரத்திலிருந்து
போலீஸ் இ நியூஸ்
செய்திகளுக்காக
மாவட்ட செய்தியாளர்
ம.சசி

Leave a Reply

Your email address will not be published.