மதுரை, வாகைக்குளம், ரவுடி கத்தியுடன் அலப்பறை, ஒடுக்கிய காவல் துறை
மதுரை மாநகர், கூடல் புதூர், D3, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான வாகைக்குளம், கீழப்பனங்காடியில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சங்கர் மகன் முருகன், இவர் சென்ற 17 ம் தேதியன்று மதியம் 12.30 மணியளவில் மேலப்பனங்காடி, குலமங்கலம் மெயின் ரோட்டில் இருக்கும் தாமரை ஓட்டலில் தனக்கு சாப்பாடு வாங்கிக் கொண்டிருந்தார். அந்த சமயம், அவருக்கு நன்கு தெரிந்த மதுரை, கருப்பையாபுரத்தை சேர்ந்த பாலு மகன் பாண்டித்துரை, என்பவன் தான் தண்ணியடிக்க பணம் கேட்டுள்ளார், அதற்கு முருகன் பணம் தர மறுக்கவே, பாண்டித்துரை என்னைப் பற்றி தெரியுமில்ல, என் மேல் எத்தனை கொலை கேசு, எத்தனை கொள்ளை கேசு இருக்குன்னு தெரியுமா, நான் காசு கேட்டா தர மாட்டியா, என்று சொல்லி அவர் முதுகு புறம் வைத்திருந்த வாள் கத்தியை எடுத்து முருகன் கழுத்தில் வைத்து அழுத்திக்கொண்டே அவர் சட்டை பையிலிருந்த 500 ரூபாயையும், ஆன்ராய்டு செல்போனையும் ,வலுக்கட்டாயமாக பறித்து கொண்டார், அப்போது முருகன் தன் உயிருக்கு பயந்து சத்தம் போடவே அக்கம் பக்கம் இருந்தவர்களும் பாண்டித்துரையை பிடிக்க பார்க்கவே அதை பார்த்த பாண்டித்துரை அவர் வைத்திருந்த வாள் கத்தியை தீப்பொறி பறக்க ரோட்டில் சரட், சரட்டு என இழுத்து நாலாபக்கமும் சுழட்டி கிட்டே அலப்பறை செய்தார் இதை பார்த்த பொது மக்கள் பீதியடைந்து நாலாபுறமும் சிதறி ஓடினர் அந்த சந்தர்பத்தை பயன்படுத்திய பாண்டித்துரை தன்னை யாராவது பிடிக்க வந்தால் அவர்களை கொல்லாமல் விட மாட்டேன் என்று மிரட்டியபடி தப்பி ஓடி விட்டான். உடனே முருகன் நடந்த சம்பவத்தை D3, காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் திரு. கதிர்வேல் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. A.செந்தில்குமார் அவர்கள் ரவுடி பாண்டித்துரை மீது வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். அதன் பின், நீதி மன்றத்தின் உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி