Police Department News

மதுரை, சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை,

மதுரை, சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை,

கொள்ளையர் அளித்த வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்த காவல் துறை

மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற பழங்கால ஆலயங்களில் பேச்சியம்மன் கோவிலும் ஒன்று, இங்கு பழங்கால ஐம்பொன் சிலைகள் மிகவும் புகழ் பெற்றவை, மதுரை மாநகர் சிம்மக்கல் C4, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான இந்த பேச்சியம்மன் கோவிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஐம்பொன் சிலைகள் சுமார் 1 அடி நீளம் 2 கிலோ எடை கொண்ட ஐம்பொன் விநாயகர் சிலை ஒன்று, சுமார் 1 அடி உயரம் 5 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட குதிரையில் அய்யனார் சிலை ஒன்று, சுமார் 1 1/2 அடி உயரம் 8 கிலோ எடை கொண்ட ஐம்பொன்னால் செய்யப்பட்ட யானையில் பொன்னர் சங்கர் சிலை ஒன்றும் இந்த மாதம் 17 ம் தேதியன்று கொள்ளையன் ஒருவனால் கொள்ளையடிக்கப்பட்டது

மேல மாசி வீதி பகுதியில் வசித்து வரும் லெக்ஷமணன்,மகன் பேச்சிமுத்து, வயது 55/2020, இவர் இந்த கோவில் நிர்வாகத்தை கவனித்து வருகிறார், கடந்த 17 ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் கோவிலை பூட்டி விட்டு தனது வீட்டிற்கு சென்றார். அதன் பின் மறுநாள் வழக்கம் போல் காலை 7 மணியளவில் கோவிலை திறந்து பூஜை வழிபாடு செய்யும் போது ஐம்பொன் சிலைகள் காணாதது கண்டு திடுக்கிட்டார், பின் கோவில் நிர்வாகியாகிய செந்தில்வேலிடம் தகவல் தெரிவித்து விட்டு திலகர் திடல் C4, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக் கொண்ட C4, காவல் நிலைய குற்றப் பிரிவு ஆய்வாளர் திருமதி. சுஜாதா அவர்கள், சிலைகளை கொள்ளையடித்த நபரை கண்டிபிடித்து சிலைகளை மீட்க விரைந்து செயல்பட்டார், ஆய்வாளர் திருமதி. சுஜாதா அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.P.தங்கவேல், அவர்கள் IPC 457(ii), 380(ii) ன்படி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார் அதன்பின் அந்த பகுதியில் உள்ள CCTV கேமராவின் பதிவுகளை ஆய்வு செய்த போது ஒரு நபர் கோவிலின் பின்புறச் சுவரேறி உள்ளே வந்து சிலைகளை கொள்ளையடித்து சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது, CCTV கேமராவின் பதிவின்படி விசாரணையை ஆரம்பித்த போது கொள்ளையடித்த நபர் செல்லூரை சேர்ந்த செல்லூர். ஜெயராமன் என தெரிய வந்தது.
அவன் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் மது பழக்கத்திற்கு அடிமையான நான் கூலி வேலை பார்த்து வந்தேன், கொரோனாவால் கடந்த ஐந்து மாதங்களால் வேலை இல்லாமல் இருந்தேன் இதனால் மது வாங்க கோவில்களில் இருக்கும் சிலைகளை திருடி விற்று மது வாங்க முடிவு செய்தேன்.
அதன்படி கோவிலில் திருடிய ஐம்பொன் சிலைகளை அனுப்பானடியில் பழைய பேப்பர விற்கும், செபாஸ்டினிடம் 3000/ ரூபாய்க்கும் குத்து விளக்கு உள்ளிட்ட பூஜை பொருட்களை மீனாட்சிபுரம் முகமது முஸ்தாபாவிடம் 1500/− க்கும் விற்று மது குடித்தேன் என்றார். பல லட்சம் மதிப்புள்ள சிலைகளை சரக்கடிக்க வெறும் 4500/− ரூபாயிக்கு விற்று மது அருந்தியது காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

அதன் பின் அவனை கைது செய்து திருடப்பட்ட சொத்துக்களை கைப்பற்றி, நீதி மன்ற உத்தரவின்படி அவனை சிறையில் அடைத்தனர்.

போலீஸ் இ நியூஸிற்காக
மதுரை மாவட்ட செய்தியாளர்கள்
M.அருள்ஜோதி
S.செளகத்அலி

Leave a Reply

Your email address will not be published.