Police Department News

மதுரை, தெப்பக்குளம் பகுதியில் கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது

மதுரை, தெப்பக்குளம் பகுதியில் கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது

மதுரை மாநகர், தெப்பக்குளம் B3, காவல் நிலையம், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சிவராமகிருஷ்ணன் அவர்கள் சட்டம், ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு சம்பந்தமாக 21/09/2020 அன்று இரவு 8 மணியளவில் தலைமை காவலர் 1119 வரதராஜன், முநிகா 2556 செந்தில், மற்றும் 3365 அன்பு ஆகியோருடன் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் ஐராவதநல்லூர் காதியானுர் கண்மாய் செம்மண் ரோடு பகுதியில் சென்ற போது அங்கே TN 59 BE 9549 என்ற பஜாஜ் ஆட்டோவில் சில நபர்கள் உட்கார்ந்தும் நின்றும் சந்தேகப்படும்படியாக நடமாடிக் கொண்டிருந்தனர், அவர்கள் காவலர்களை பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவர்களை ரோந்து சென்ற காவலர்கள் மடக்கிப்பிடித்து சோதனை செய்ததில், அவர்களிடம் அதிபயங்கரமான கத்தி, வாள், அரிவாள் முதலான ஆயுதங்களும் மிளகாய் பொடியும் வைத்திருந்தனர் மேலும் விசாரித்ததில் அவர்கள் கூட்டுக்கொள்ளையடிக்க திட்டம் தீட்டியிருந்தது தெரியவந்தது, அவர்களை சார்பு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், ரோந்து சென்ற காவலர்களோடு சேர்ந்து அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்து, அவர்களிடமிருந்த ஆயுதங்களை கைப்பற்றி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் அவர்கள் திருப்புவனம் பகுதியை சேர்ந்த செல்லத்தம்பி மகன் பாலவிக்னேஷ் வயது 22, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் தினகரன் வயது 20, ஐராவதநல்லூரை செர்ந்த ரவி மகன் ராம்கி வயது 20, விரகனூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ராமர் வயது 22, அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் பன்னீர்செல்வம் வயது 27, மற்றும் அதே பகுதியை சேர்ந்த செல்வம் மகன் கவிபாரதி என்ற குட்டமுருகன் வயது 23, என தெரிய வந்தது. பூர்ண விசாரணையின் முடிவில் ஆய்வாளரின் உத்தரவின்படி அவர்களின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 399 ம் பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து, நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதி மன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.