காவலர் வேலை வாய்ப்பு காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது? எப்படி படிப்பது? இனி குழப்பம் வேண்டாம் !
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பங்களை அனுப்புவது மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு இடையே எழக்கூடிய சந்தேகங்களை களைவதற்காகவும் அவர்களுக்கு ஒரு சரியான தீர்வு அளிக்கும் வண்ணமாகவும் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு மைய சிறப்பு உதவி மையம் செயல்பட்டு வருகின்றது.
காவலர் தேர்வுக்கு என்ன படிப்பது, எப்படி படிக்கது, என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக கீழே விவரிக்கப்பட்டுள்ளது. நாம் படிக்க வேண்டியவை தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் மற்றும் உளவியல்.
தமிழ்
இலக்கணம் மற்றும் நூல்களை எழுதியவர் தவிற பிற கேள்விகள் கேட்க்க வாய்ப்பில்லை..!!
ஆங்கிலம்
அப்ரிவேஷன்..இலக்கணம் குறிப்பு மற்றும் இடைப்பட்ட சொற்கள் (எ-டு) aa_ba_a_ _ bb இது போன்றவை
கணிதம்
கணிதத்தில் சராசரி கணக்குகள் (average sum) மற்றும் மாற்று குறியிட்டு கணக்கு (எ-டு) (+) என்பது (-) எனவும் (-) என்பது (×) எனவும் (×) என்பது( ÷) என்ற கணிதத்தால் முக்கிய கவனம் செலுத்துங்கள் இவற்றுடன் லாபநஷ்ட்டகணக்கு எனப்படும் ஒரு ஆப்பில் 100 ரூ வாங்கி 123 ரூபாக்கு விற்றல் லாப நஷ்ட்டம் என்ன என்பது போல கணக்குகள்…மற்றும் வர்கமூலம் வயது வித்தியாசம்_கணக்குகள் (எ-டு) ராமுக்கு பத்து வருடத்திர்க்கு முன்பு 10 வயது அவர்தந்தைக்கு தற்ப்போது 50 வயது அவர்களுடைய வயது என்ன போன்ற வினாக்கள்…
(சுலபமான விடை கண்டுப்பிடிக்க வர்கமூலத்திர்க்கும் வயது கணக்குக்கும் நாளை ஒரு வீடியோவை பதிவிடப்படும்)
அறிவியல்..( இயற்பியல்..வேதியியல். உயிரியல்)
இயற்பியல்
இயற்பியலில் பொருட்களை உறுவாக்கியவர்..அவரி பெயர்(எ-டு) என்ம விதி..நிலைம விதி..அழுத்தம் விசை..உந்துவிசை..போன்றவை குறிப்பாக நியூட்டன் லென்ஸ் மற்றும் கண்ணின் விழித்திரை பாடம் கவனம் செலுத்தி படியுங்கள்..!! மற்றும் SI அலகுகள்
வேதியியல்
வேதியியல் இதர்க்கு ஒன்பதாவது பத்தாவது பாடத்திர்க்கு மட்டும் கவனம் செலுத்துவதே போதுமானது..!! குறிப்பாக புக் பேக் கேள்வி பதில் அதிகம் கவனம் செலுத்தினால் நிச்சையம் 2 மதிப்பெண்க்கு மேல் வர வாய்ப்புள்ளது..!!
உயிரியல்
உயிரியலில் புஞ்சைகள் புரோட்டோ சோவாக்கல் செல்கள்…தாவரம் மற்றும் விலங்கு செல்களுக்கு அதிக கவனம் அவசியம். மற்றும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு கவனம் செலுத்துங்கள்.
சமூக_அறிவியல் (வரவாறு- புவியியல் -குடிமையியல்)
வரவாறு
இதற்கு ஆறாம் வகுப்பு ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு கவனம் தேவை குறிப்பாக குஷனர்கள், குதுப்பினார்கள், குப்தர்கள், நந்தவம்சம்,சேர சோழ பாண்டியர்கள் மற்றும் சுதந்திர இந்தியா குறிப்பாக வருடங்கள்.
புவியியல்
பூமி நிலத்தோற்றம்…அட்சய தீர்க்க ரேகைகள்…கடல் மற்றும் சமவெளிகள் இந்திய நிலத்தோற்றம் மற்றும் பீடபூமிகள் மேற்க்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள், வடமேற்க்கு தென் மேற்க்கு பற்றி படிப்பதே போதுமானது.
குடிமையியல்
இதில் ஏழாம் வகுப்பு பாட புத்தகம் படிக்க தேவையில்லை 6..8…9..10 படிக்க வேண்டும் குறிப்பாக புக் பேக் அவசியமான ஒன்று.
உளவியல்
உளவியல் என்ன படிக்க வேண்டும் என்பது ஆலோசனை செய்து வருகின்றோம் அதை பற்றி பதிவேற்றம் செய்யப்படும் கூடிய விரைவில் தேவையானவர்கள் பெற்றுகொள்ளவும்..!!
இதிலையே குறைந்தபட்சம் 50 மதிப்பெண் மேல் பெற வாய்ப்பு உள்ளது..!!