மதுரை, ஊமச்சிகுளம், DSP அலுவலகதலைமை காவலருக்கு கத்தி குத்து, மூவர் கைது
மதுரை மாவட்டம், அய்யர்பங்களா, G.R.நகர், 5 வது தெருவில் வசித்து வருபவர் சுந்தரமூர்த்தி மகன் சதுரகிரி வயது 42/2020, இவர் தமிழ்நாடு காவல் துறையில் 2003−ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கருப்பாயூரிணி காவல் நிலையத்தில் பணிபுரிந்து தற்சமயம் அயல்பணியாக மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் DSP அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் . இவர் தனது குழந்தைகளுக்கு பழனி முருகன் கோவிலில் 06/10/2020 அன்று மொட்டை போடும் நேர்த்திக்கடன் இருந்ததால் 04/10/2020 முதல் 07/10/2020 ம் தேதி வரை தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டு 05/10/2020 ம் தேதி அவரது சொந்த ஊரான பேரையூர் அருகிலுள்ள வண்டாரி என்னும் கிராமத்திற்கு சென்று அவரது பெற்றோர்களை சந்தித்து விட்டு மதியம் 2.45 மணிக்கு மதுரை ஆரப்பாளையம் வந்து பழனிக்கு ரெகுலராக பேரூந்து போக்குவரத்து உள்ளதா என விசாரித்து விட்டு பாத்திமா கல்லூரி வழியாக வீட்டிற்கு செல்வதற்காக 05/10/2020−ம் தேதி மதியம் 3.15 மணிக்கு சம்பவ இடம் அருகே வந்த போது, அந்த இடத்தில் ” எங்க நண்பன் பார்த்திபனே வெட்டி கொன்னுட்டு என்ன தைரியமா வீட்டுல குடியிருக்காங்க ” என அலப்பறை செய்து கொண்டிருந்த சிலர் வழி மறித்தனர்.
அவர்களை பார்த்து ஏண்டா தம்பிகளா என்னை வழி மறிக்கிறீர்கள் என கேட்க அதற்கு அவர்கள் நீ கோபாலகிருஷ்ணனின் பிரண்டானு கேட்டுள்ளனர் அதற்கு கோபாலகிருஷ்ணன்னா யாரு, நான் போலீஸ்டா என சொல்லிக்கொண்டே டூ வீலரைவிட்டு கீழே இறங்கியபோது அந்த அலப்பரை செய்த மூவரும் நீ என்ன பெரிய இவனாடா என்று சொல்லி முகத்திலும், மார்பிலும் கையால் அடிதகதுள்ளனர், எவன் தலையையாவது வெட்டி என் நண்பன் செத்த இடத்தில் வைத்தால்தான் எங்களுக்கு மரியாதை என சொல்லிக்கொண்டே கையில் வைத்திருந்த கத்தியால் இதோடு செத்து தொலைடா என சொல்லி முதுகிலும், அக்குள் அருகேயும் மாறி மாறி குத்தி இரத்த காயத்தை ஏற்படுத்தினர் இதனால் வலி தாங்கமுடியாமல் அலறி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வரவும்அங்கிருந்து ஓடி விட்டனர் ஓடும் போது நீ போலீஸில் புகார் கொடுத்தால் உன்னை நீ எங்கிருந்தாலும் தேடி வந்து வெட்டுவோம் என கூறிக்கொண்டே ஓடி விட்டனர். அதன் பின் தனது மனைவிக்கு தகவல் சொல்லி அவர் வந்தவுடன் அய்யர்பங்களாவிலுள்ள BGM மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அதன்பின் 06/10/2020 அன்று 12 மணி்க்கு கரிமேடு C5, காவல் நிலையத்தில் புகாரளித்தார்
புகாரை பெற்றுக்கொண்டதும் காவல் ஆய்வாளர் S.பிளவர்ஷீலா(பொறுப்பு) அவர்கள் துரித நடவடிக்கை மேற்கொண்டார். ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு, முத்துராஜா அவர்கள் வழக்கு பதிவு செய்து , குற்றவாளிகளை விரைந்து பிடித்து கைது செய்தார்கள்.
1)ஆரபாளையம் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் விக்னேஷ் வயது 23/2020,
2) அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் ராஜேஸ் வயது 21/2020,
3) அதே பகுதியை சேர்ந்த நல்லதம்பி மகன் நவீன்குமார் ஆகியோரை கைது செய்து விசாரதை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர், அதன் பின் நீதி மன்ற உத்தரவின்படி அவர்களை சிறையில் அடைத்தனர்.