Police Department News

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனநத் சின்ஹோ அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் முழுவதும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 351 புகார்களுக்கு தீர்வு. 19 காவல் நிலையங்களின் மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனநத் சின்ஹோ அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகர் முழுவதும், காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள 351 புகார்களுக்கு தீர்வு. 19 காவல் நிலையங்களின் மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

மதுரை மாநகர காவல் நிலையங்களில் தேங்கிய நிலையிலுள்ள புகார்களுக்கு உடனடியாக தீர்வு காண்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்த மதுரை மாவட்ட காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டார், அதன்படி மதுரையில் உள்ள 19 காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகாரில் தொடர்புடைய மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகியோருக்கு இம் முகாமில் ஆஜர் ஆவதற்கு சம்மன் அனுப்பபட்டது.

மாநகரில் அந்தந்த காவல் நிலையங்களுக்குரிய பகுதிகளில் உள்ள திருமண மன்டபங்களில் காலை 10 மணி தொடங்கி பகல் 2 மணிவரை முகாம்கள் நடைபெற்றன.

இதில் அடிதடி, நிலத்தகராறு, அவதூராக பேசுதல்சமூக வளைதளங்களில் அவதூறு பரப்புதல் பணம் கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தீர்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. மனுதாரர், எதிர் மனுதாரர் என 800 க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பங்கேற்றனர்.

இதில் 19 காவல் நிலையங்களில் புகார் அளித்த மனுதாரர்களின் 351 புகார்களுக்கு தீர்வு காணபபட்டன.

முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகாமிற்கு வந்தவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு தீர்வு முகாமானது இனி ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நடைபெறும் என மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.