காவலர் வீர வணக்கம் நாள், காவலர்கள் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்
சென்னை : வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவு கல்வெட்டை முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் நேற்று வீரமரணம் அடைந்த காவலர்கள் மற்றும் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்படுகிறது. இதையொட்டி, தமிழகத்தில் 1962ம் ஆண்டு முதல் வீரமரணம் அடைந்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும், மரக்கன்றையும் நடவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.