Police Department News

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை குறிப்பிடும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 31ஆம் தேதி தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்படுகிறது.

31.10.2020 இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கீழ்க்கண்ட உறுதிமொழியை காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமாற உறுதியளிக்கிறேன். சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கையாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வுவினை பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள் பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்று உளமாற உறுதியளிக்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றனர்

Leave a Reply

Your email address will not be published.