திண்டுக்கல் மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 6 நபர்கள் கைது. மேலும் 6.800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர்.
03.11.2020 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து காவல் ஆய்வாளர் திரு.முத்து பிரேம்சந்த் அவர்களின் தலைமையில் காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கவுஞ்சி மற்றும் மன்னவனூர் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன் வயது(52), குழந்தைவேல் வயது(63), பாலசுப்பிரமணி வயது(37), ஆனந்தன் வயது(51), ராஜேந்திரன் வயது (53) ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 5.500 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரைக்காபட்டி அருகே காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் சோதனை செய்த போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த பாண்டி வயது (36) என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து 1.300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.