Police Recruitment

சென்னை ஐ.ஐ.டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தல் நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் .

சென்னை ஐ.ஐ.டி சிகிச்சை மையத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் துறையினருக்கு சிகிச்சை வழங்கி உதவி செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டி நன்றி தெரிவித்தல் நிகழ்வில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார் .

உலகமே கொரோனா நோய் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய நாட்களில் தமிழகத்தின் காவல் துறையினர் முன்கள பணியாளர்களாக இரவு பகல் என்று பாராமல் பணி செய்தும் உயரதிகாரிகள் உடன் இருந்து பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பதிலும் ஒருங்கிணைந்து அரசு துறைகளின் ஒருங்கிணைப்புடன் பொது மக்களைக் காத்து பணியாற்றி நோய் தொற்றிலிருந்து விதிவிலக்கில்லாமல் காவல்துறையினரும் அவர்தம் குடும்பத்தினரும் பாதிப்படைந்தனர்.

காவல்துறையினருக்கு உரிய முக்கியத்துவம் தந்து தமிழக அரசும், காவல் துறை உயர் அதிகாரிகளும் எடுத்த முயற்சியால் சென்னை கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் மகாநதி என்ற உறைவிடத்தை காவல்துறையினருக்கான covid-19 நோய் சிகிச்சை மையமாக சுகாதாரத்துறை பெருநகராட்சி ஒத்துழைப்புடன் 11.5.2020 முதல் ஆரம்பித்து 02.11.2020 வரை தனி கவனம் செலுத்தி காவலர்களுக்கான சிறப்பு சிகிச்சை மையமாக செயல்படுத்தப்பட்டது. நோய் தொற்று குறைந்து காவல் துறையினர் யாரும் சிகிச்சையில் இல்லாததால் 2.11.2020 அன்று மேற்படி சிகிச்சை மையம் முடித்து வைக்கப்பட்டது.

இதுவரை 3,117 காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினருடைய உடல்நலத்தை சீராக்கி அர்ப்பணிப்புடன் காவல்துறையினருடன் உடனிருந்து மருத்துவ சிகிச்சையும் பூரண குணமாகும் வரை அக்கரை எடுத்த முன் களப்பணியாளர்கள் ஆன மருத்துவர்கள் செவிலியர்கள் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி கூறும் வகையில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப. அவர்கள் நேற்று (04.11.2020) மாலை ஆணையரகத்தில் வரவேற்று நன்றி அறிதல் நிகழ்வை நெகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்தார்கள்.

இதன் பேரில் தொடர்ந்து கோட்டூர்புரம் ஐஐடி வளாகத்தில் மகாநதி covid-19 நோய் சிகிச்சை மையத்தில் தொடர்ச்சியாக பணிபுரிந்த ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை விரிவுரையாளர் மருத்துவர் திரு.ஏ.மனோகரன், உதவி விரிவுரையாளர் மருத்துவர் திரு.K.ராஜா, அசோசியேட் விரிவுரையாளர் மருத்துவர் திரு.G.வெங்கடேஷ், செவிலியர்கள் திருமதி.K.சுந்தரம்மாள், திருமதி.S.சரோஜா, திருமதி.S.கிரிஜா, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்கள் திருமதி.K.பத்மாவதி, திரு.பிரகாஷ், தூய்மை பணியாளர்கள் திரு. S.ஜின் ரே கிப்ட், திரு.D. ஏழுமலை ஆகிய முன்கள பணியாளர்களுக்கு, காவல்துறையில் பணியாற்றுகின்ற காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவர் சார்பிலும் நன்றியுடன் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் பாராட்டு நற்சான்று வழங்கி கெளரவித்தார்கள். மேலும் மேற்படி covid-19 நோய் சிகிச்சை மையத்தில் சிறப்பாக ஒருங்கிணைப்பு பணி செய்த J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.அஜிகுமார் மற்றும் குழுவினரை பாராட்டினார்.

இந்நிகழ்வில் நுண்ணறிவுப்பிரிவு துணை ஆணையாளர்கள் திருமதி.S.விமலா, திரு.K.ஶ்ரீதர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.