கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது
கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது
சாத்தங்காடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை கைது செய்த நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் .
நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் கா 52866 , அஜித் அலி கா .52871 மற்றும் அமிர்தபாண்டியன் கா .49567 ஆகியோர் கடந்த 05.7.2021 அன்று இரவு நுங்கம்பாக்கம் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த 3 நபர்களை நிறுத்தி விசாரணை செய்து , வாகனத்தை சோதனை செய்தபோது , அதில் 1 கத்தி இருந்தது தெரியவந்தது . நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில் பிடிபட்ட நபர்கள் , 1.பாலாஜி , வயது 19/21 திருவொற்றியூர் 2.முரளி கிருஷ்ணன் , வயது 19/21,பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ஒரு இளஞ்சிறார் என்பது தெரிய வந்தது.
மேலும் இந்த 3 நபர்களும் சில மணி நேரத்திற்கு முன்பு சாத்தாங்காடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெற்றி விநாயகர் நகர் மற்றும் கெனால் ரோடு சந்திப்பு அருகே நடந்து சென்று கொண்டிருந்த அப்துல் அஜிஸ் என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரது செல்போனை பறித்துக் கொண்டு தப்பியதும் தெரியவந்தது . குற்றவாளிகளிடமிருந்து 1 செல்போன் , 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கத்தி கைப்பற்றப்பட்டது. மேலும் மேற்படி குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரவு பணியில் விழிப்புடன் செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த F3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய காவலர்கள் தாமோதிரன் கா 52866 , அஜித் அலி கா .52871 அமிர்தபாண்டியன் கா .49567 ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் , இ.கா.ப. , இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்