திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 2452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
10.11.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 09.11.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 06 வழக்குகளும், சிக்னலில் விதியை மீறியதற்காக 27 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 256 வழக்குகளும், மது அருந்தி வாகனம் ஓட்டியதற்காக 02 வழக்குகளும், வாகனங்களில் அதிக பொருள்களை ஏற்றி வந்ததற்காக 02 வழக்குகளும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக111 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 970 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் உட்காரும் நபர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 188 வழக்குகளும், மேலும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 614 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் மூன்று நபர்கள் பயணம் செய்ததற்காக 11 வழக்குகளும், இதர சாலை விதிகளை மீறியதற்காக 265 வழக்குகளும் மொத்தம் 2452 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்கள் முறையான சாலை விதிகளை கடைபிடித்து பயணம் செய்யுங்கள். சாலை விதியை கடைபிடிக்காமல் செல்வதால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. சாலை விதியை கடைபிடிப்போம் விபத்துக்களை தவிர்ப்போம்….