சிறுவர் சிறுமிகள் கைபேசியை பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் .
19.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.18.11.2020 அன்று வேடசந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குட்டம் கிராமப் பகுதியில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் திரு.மகேஷ் அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை ஒருங்கிணைத்து பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், இன்றைய சூழ்நிலையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கைபேசியை கொடுப்பதன் மூலம் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும், பெண்கள் சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களிடம் பழகுவதால் ஏற்படும் விபரீதங்கள் குறித்தும், தங்களது கிராமப்பகுதிகளில் CCTV கேமரா பொருத்துவது அவசியம் குறித்தும், அன்னிய நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் உடனே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும், எனக்கூறி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்,
மேலும் பொது மக்களின் புகார் மனு பெற்று விரைவில் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் காவல்துறை ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.