வணிக வரித்துறை உதவி ஆணையர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
மதுரை விராட்டிபத்து முத்து தேவர் காலனியை சேர்ந்தவர் மனோகரன் வணிக வரி துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர் கடந்த 22 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் புதுச்சேரியில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்று விட்டார்
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 63 பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர். வீடு திரும்பிய மனோகரன் நகை திருடு போயிருப்பதை கண்டு அதிர்சியடைந்தார் இது குறித்து எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார் காவல் ஆய்வாளர் ராஜதுரை சார்பு ஆய்வாளர் பாண்டீஸ்வரி ஆகியோர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டில் கிடந்த இரும்பு கம்பியையும் கைபற்றி மேலும் தடயவியல் நிபுணர்கள் கை ரேகைகளை சேகரித்தனர் அந்த பகுதியில் சிசிடிவி காமிரா வைக்கப்படாததால் கொள்ளையர்களை பற்றி துப்பு துலங்க போலீசாருக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கைரேகைகள் மற்றும் அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்