விடுதியை விட்டு வெளியேறி 04 சிறுமிகளை மீட்டு ஒப்படைத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் அவர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள் .
21.11.2020 திண்டுக்கல் மாவட்டம்.19.11.2020 அன்று தாண்டிக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கே.சி பட்டி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த 4 சிறுமிகள் அதிக நேரம் செல்போன் பயன்படுத்தியதை விடுதி பாதுகாவலர் கண்டித்ததால் நான்கு சிறுமிகளும் தங்கும் விடுதியை விட்டு வெளியேறி திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்து எங்கே செல்வது என தெரியாமல் நின்று கொண்டிருந்தனர். இதனை கவனித்த பேருந்து நிலைய ரோந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நாராயணன் அவர்கள் சிறுமிகளை அழைத்து விசாரணை செய்து அவர்களின் பாதுகாவலருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்பு சிறுமிகளுக்கு அறிவுரை வழங்கி பாதுகாவலரிடம் ஒப்படைத்தார்.
இச்செயலையறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் திருமதி.ரவளி பிரியா,இ.கா.ப., அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.நாராயணன் அவர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.