மதுரை, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிபறி
மதுரை, மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B 6, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான சோலையழகுபுரம் 1 வது தெருவில் வசித்து வருபவர் பழனிச்சாமி தேவர் மகன் நாட்ராயன் வயது 45/2020, இவர் பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார்,
இவர் கடந்த 20 ம் தேதி காலை 8 மணியளவில் வேலைக்கு செல்வதற்காக ஜெய்ஹிந்துபுரம், ரத்தினாபுரம் ரோட்டில், உள்ள சொக்க கொத்தன் தெருவின் சந்திப்பில் வரும் போது, அவ்வழியே வந்த வாலிபர் தனக்கு தண்ணீயடிக்க பணம் வேண்டுமென கேட்டு இவரை வழி மறித்துள்ளார், இவர் பணம் தர மறுக்கவே தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி, அவர் பெயிண்ட் வாங்க வைத்திருந்த ரூபாய் 300/− ஐ பிடிங்கி கொண்டு தப்பிச் சென்றார், உடனே நாட்ராயன் ஜெய்ஹிந்துபுரம் B6, காவல் நிலையத்தில் புகார் அளித்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி R.எஸ்தர் அவர்கள் விரைந்து நடவடிக்கையெடுத்தார், ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.B.G.செல்வகுமார் அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி, நபரை கைது செய்து விசாரணை செய்த போது அவர் ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 3 வது தெருவை சேர்ந்த வீரபாண்டி மகன் சுரேஷ்குமார் என தெரிய வந்தது, உடனே
அவரை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்
