Police Department News

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை, அதிரடியாக கைது செய்த ஆய்வாளர்

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட பிரபல ரவுடிகளை, அதிரடியாக கைது செய்த ஆய்வாளர்

மதுரை, பழங்காநத்தம், நேரு நகரை சேர்ந்த கருப்பையா மகன் வினோத் வயது 35/2020, என்பவர், இவர் நெல்பேட்டை பன்னீர் செல்வம் ஆயில் ஸ்டோரில் டிரைவராக வேலை செய்து வருகிறார், சம்பவத்தன்று கடந்த 16 ம் தேதி காலை சுமார் 10 மணியளவில் தன் நண்பர் சிவகுமார் என்பவருடன் மதுரை,தெற்கு வாசல் FF ரோடு வழியாக நடந்து வரும் போது முஸ்தாபா ஸ்டீல் கடை அருகில் அவருக்கு நன்கு தெரிந்த பிரபல ரவுடிகள் காமராஜபுரத்தை சேர்ந்த அழகர்சாமி மகன் சின்ன வயித்தாலை என்ற மணிகண்டன் வயது 20/2020, கீரைத்துறையை சேர்ந்த குமார் மகன் அஜித்குமார் வயது 23/2020, சிந்தாமணியை சேர்ந்த முனியசாமி மகன் சப்பை என்ற சபரி ஆகியோர் இவர்களை வழி மறித்து நீங்கள் ஆயில் ஸ்டோரில் டிரைவராக வேலை பார்பவர்கள்தானே தீபாவளிக்கு போனஸ் வாங்கி இருப்பீர்கள் எங்களுக்கு செலவுக்கு பணம் கொடுத்து விட்டு போங்கள் என கூறி வழியை மறித்தனர் அதற்கு எங்களிடம் பணமில்லை, எல்லாம் செலவாகி விட்டது, என்னுடைய கை செலவுக்குத்தான் 500/ − ரூபாய் வைத்துள்ளேன் என கூறவும், சரி அதை கொடுத்து விட்டு போ என கூறி வழியை மறித்தனர். அவர்கள் தரமுடியாது என மறுக்கவே அதற்கு நாங்கள் எல்லாம் இந்த ஏரியாவில் பெரிய ரவுடிகள் என்று தெரிந்தே காசு கொடுக்க மேட்டேன் என்றா சொல்றே உன்னை என்ன செய்கிறேன் பார் என கூறிக் கொண்டே கத்தியே எடுத்து வயிற்றில் வைத்து அழுத்தியவாறு எடு பணத்தை இல்லை என்றால் குத்தி குடலை எடுத்து விடுவேன் என மிரட்டினர், அப்போது கூட வந்த மற்ற இரண்டு ரவுடிகளும் ஆக்ரோசமாக பணத்தை கொடுத்து விடு இல்லையென்றால் குத்தி கொன்று விடுவோம் என மிரட்டியவாறு கத்தியால் குத்துவது போல் சைகை செய்தார்கள் உடனே பயத்தில் அவர்கள் கத்தவே அக்கம் பக்கத்தில் இருந்த பொது மக்கள் அவர்களை பிடிக்க ஓடி வரவே அவர்களையும் கத்தியை சுழற்றியபடி மிரட்டவே பயந்து ஓட ஆரம்பித்தனர், சற்று நேரத்தில் அந்த இடமே கலவரப் பகுதியாக மாறி விட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரவுடிகள் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். அதன் பின் அவர்கள் இருவரும் தெற்கு வாசல் காவல் நிலையம் வந்து நடந்த சம்பவத்தை கூறி, ரவுடிகளைப் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி அனுராதா அவர்கள் துரித நடவடிக்கை எடுத்தார். ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் A.முருகன் அவர்கள் ரவுடிகள் மீது வழக்கு பதிந்து அவர்களை கைது செய்தார்கள், மேலும் ஆய்வாளர் அனுராதா அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் இவர்கள் மேலும் குற்றச்செயல்களில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இவர்களை கைது செய்ததின் மூலம் அவைகள் தடுக்கப்பட்டன.

செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி,மாநில செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.