மதுரை தீ விபத்தில் பலியான தீயணைப்பு வீரர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணம்
மதுரையில் தீபாவளியன்று தெற்கு வாசல் பகுதியில் நடைபெற்ற தீ விபத்தை கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு வீரர்கள் சிவராஜ், மற்றும் கிருஷ்ணமூர்த்தி இருவரும் எதிர்பாராத விதமாக கட்டிடம் இடிந்து விழுந்து உயிரிழந்தனர். இந்நிலையில் சிவராஜின் மனைவிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 25 லட்ச ரூபாய்கான காசோலையை நிவாரணமாக வழங்கினார். உடன் சிவராஜின் தாய் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இதே போன்று உயிரிழந்த மற்றொரு வீரரான கிருஷ்ணமூர்த்தியின் தாயாரிடம் ரூ. 25 லட்சத்திற்கான நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.கிருஷ்ணமூர்த்தி நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்காக காத்திருந்த நிலையில் இப்படியொரு சோகம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநிலச்செய்தியாளர்