தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள்
சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி
கைதிகள் சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் , அவர்களின் விடுதலைக்கு பின் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக திகழ்கின்றனர் என மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேசன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி பேசினார்.
மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர் இவர்களில் 600 க்கு மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகளின் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில் பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் உற்பத்தி செய்த இனிப்பு, காரம், மழைக்கோட், அலுவலக கவர்கள், போன்ற பொருட்களை விற்க பிரிசன் பஜார் செயல்படுகிறது, மதுரை கைதிகள் தயாரிக்கும் அலுவலக கவர்கள் மாநிலம் முழுவதும் விற்க்கப்படுகிறது. மேலும் மனம் உடல் நலம், காக்க யோகா , பிரணாயாமம் தியானப்பயிற்சிகள் நடத்தப்படுகின்றன, என்றார்.
அசோசியேசன் தலைவர் சன்முகசுந்தரம் செயல்குழு உறுப்பினர் பழனிவேல்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.