சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருகே ஆத்தங்குடி பகுதியில் 28.10.2019 அன்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக குன்றக்குடி போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சுப்பையா என்பவர் மீது u/s 5 r/w 7(3) PLR Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் , மற்றும் ரூ 21,500 பறிமுதல் செய்தனர் .
வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது மதுரை ஜெய்ஹிந்த் புரம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அன்புதாசன் மற்றும் போலீசார் சோலை அழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் பெரிய வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது (24) என்பதும் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் நண்பரை கொலை […]
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த வாலிபர் சாவு மதுரை மகபூப்பாளையம் டி.பி. மெயின் ரோடு பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரிமேடு போலீசார் அங்குள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சோதனை நடத்தினர். அங்கு 8 பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. அந்த பெண்களை மீட்ட போலீசார் அந்த கெஸ்ட் ஹவுசின் மேலாளர் ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்த டார்வின், மகபூப்பாளையம் கிழக்கு குறுக்கு தெருவை சேர்ந்த சீனிவாசன், தல்லாகுளம் […]
கடலூரில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சில மணி நேரங்களில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த கடலூர் மாவட்ட போலீசார். கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் தலைமையிலான குழுவினர் கடத்தப்பட்ட பெண் குழந்தையை மூன்றரை மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.