அயராத காவல் பணியிலும் இரத்ததானம் வழங்கிய காவல் ஆய்வாளருக்கு பொதுமக்களிடையே குவியும் பாராட்டுக்கள் .
28:12:2020 தேனி மாவட்டம், போடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக ஒருவர் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக ‘B’ பாசிட்டிவ் இரத்தவகை தேவைப்படுவதாக தகவல் கிடைத்தவுடன் போடி நகர் காவல் ஆய்வாளர் திருP.சரவணன் அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்று தக்க மருத்துவ பரிசோதனைக்கு பின் இரத்ததானம் வழங்கினர்.
காவல் ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயல் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே பெரும் பாராட்டை பெற்று வருகிறது.



