Police Department News

காஞ்சிபுரம், முதியோருக்கான கருணை இல்லத்தில் மத்திய உளவுப் பிரிவு ஐ.ஜி பத்மநாபன் தலைமையில் 5பேர் கருணை இல்லத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

உத்திரமேரூர் அருகே பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் ஆதரவற்றோருக்கான கருணை இல்லத்தில் இறக்கும் முதியோரைக் கல்லறையில் அடைத்து வைத்து, அதில் எஞ்சும் எலும்புகள் விற்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன. இது குறித்துப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில் இன்று

கருணை இல்லத்தின் நிர்வாகியான பாதிரியார் தாமசிடமும், அங்குள்ள முதியோர்களிடமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர்.

இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்கள் தங்களை வீட்டுக்குச் செல்லவிடாமல் நிர்வாகம் தடுத்து வைத்துள்ளதாக மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகளிடம் குற்றச்சாட்டைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த அறிக்கை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என ஆய்வை முடித்தபின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்று முன் தினம் முதியோர் இல்லத்தில் கோட்டாட்சியர் தலைமையில் மாவட்ட சமூகநலதுறை அதிகாரிகள், சுகாதாரத்துறையினர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் காப்பகத்திற்கு உரிய அனுமதியில்லாததும், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்தது. இதுதொடர்பாக கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் பொன்னையாவிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், முதியோர்களை முறைகேடாக அடைத்து வைத்து கொடுமை செய்வதாகவும், உரிய அனுமதியின்றி காப்பகம் செயல்படுவதாகவும் எழுந்த புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என ஆதரவற்ற முதியோர் இல்ல நிர்வாகியான பாதிரியார் தாமஸுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. புகார் குறித்து உரிய பதிலளிக்கவில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.