பெண்குழந்தைகள் புகாரளிக்க அஞ்சல் அட்டை அறிமுகம்.
அடையாறு துணை கமிஷனர் மதிப்பிற்குரிய திரு விக்ரமன் இ.கா.பா ஏற்பாடு.
பெண் குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு, அவர்கள் தங்கள் தனிப்பட்ட புகார்களை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில் தனி அஞ்சல் அட்டையை சென்னை அடையாறு போலீஸ் துணை கமிஷனர் திரு .விக்ரமன் இ.கா.பா.அறிமுகப்படுத்தியுள்ளார்.
சென்னை நகரில் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். சென்னை அடையாறில் கூடுதல் கமிஷனர் திரு.தினகரன் இணை கமிஷனர் திரு. பாபு மேற்பார்வையில் அடையாறு துணை கமிஷனர் திரு. விக்ரமன் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி கானத்தூர் காவல் சரகத்தில் அதிகாரிகள் ஆளிநர்களுடன் முட்டுக்காடு கரிகாட்டுகுப்பம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பெண்களிடையே துணை கமிஷனர் விக்ரமன் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை நேற்று வழங்கினார்.மேலும் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் அஞ்சலட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து காவல் நிலையம் வந்து புகார் அளிக்க முடியாத நிலையில் மற்றும் SOS என்ற பாதுகாப்பு செயலியை பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளை தபால் மூலமாக அனுப்பும் வகையில் துணை கமிஷனர் அலுவலக முகவரி குறிப்பிட்ட அஞ்சல் அட்டையை அடையாறு துணை கமிஷனர் திரு.விக்ரமன் நேற்று அறிமுகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் விக்கிரமன் பேசியதாவது பெண் குழந்தைகள் தங்கள் புகார்களை அந்த அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டு அதனை அஞ்சல் பெட்டியில் போடலாம் மேலும் அது தொடர்பான புகார்கள் தன்னுடைய நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் அளிக்கப்படும் புகார் சம்பந்தப்பட்ட தகவல்கள் முற்றிலும் ரகசியம் காக்கப்படும். இதனால் குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளை தெரிவிக்க எந்த விதத்திலும் தயக்கம் காட்ட வேண்டாம் என தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் வந்திருந்த குழந்தைகளுக்கு Good Touch மற்றும் Bad Touch குறித்த விழிப்புணர்வை அடையாறு மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா வழங்கினார்.பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அதில் பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்களுடன் அடையாறு துணை கமிஷனர் முத்திரையிட்ட அஞ்சல் அட்டைகள் வழங்கப் பட்டது.இந்த நிகழ்ச்சியில் நீலாங்கரை உதவி கமிஷனர் விஸ்வேஸ்வரய்யா மற்றும் கானத்தூர் சட்டம் ஒழுங்கு மற்றும் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் ஆளிநர்கள் பங்கேற்றனர்.இதில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டதோடு அவர்களின் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அனைவரும் முகக் கவசம் அணிதல் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவதோடு தடுக்க அறிவுரை வழங்கினார் புத்தாண்டு தொடக்கத்தில் காவல்துறையின் இத்தகைய புதிய முயற்சியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.