Police Recruitment

சவாலான செயல்களை திறம்பட செய்ய வேண்டும் ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அறிவுரை.

சவாலான செயல்களை திறம்பட செய்ய வேண்டும் ஆயுதப்படை காவலர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு.மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அறிவுரை.

தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் சென்னை நகர ஆயுதப்படை பணிக்கு வந்த 3019 ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு போலீஸ் கமிஷனர் திரு.மகேஷ்குமார் அறிவுரைகள் வழங்கி வாழ்த்தினார்.
தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் 1483 ஆண் காவலர்கள் மற்றும் 1536 பெண் காவலர்கள் என மொத்தம் 3019 காவலர்கள் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டனர். அவர்களை சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதானத்தில் சந்தித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். அப்போது கமிஷனர் பேசியதாவது-
சென்னை ஆயுதப் படையில் இருந்து பணி மூப்பு அடிப்படையில் கடந்த மாதம் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து பிரிவில் பணிபுரிய 2500 ஆயுதப்படை காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் ஆயுதப் படையில் பணிபுரிய உள்ள காவலர்கள் ஆகிய நீங்களும் சென்னை பெருநகர காவல் ஆயுதப் படையின் சார்பில் சவாலான செயல்களை திறம்பட செய்திட வேண்டும். மிகுந்த கவனத்துடன் பணிபுரிந்து, சென்னை பெருநகர காவல்துறையின் மாண்பினை காக்க வேண்டும்.கொரோனா பேரிடர் காலத்திலும் நிவர் புயலின் போதும் சென்னை பெருநகர காவல் துறையினர் மனம் தளராமல் பணி செய்து பொது மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டது போல நீங்களும் பணி செய்திட வேண்டும்.உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் ஆயுதப்படை காவலர் அதிகாரிகளை சந்தித்து தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். உயரதிகாரிகள், காவல் ஆளுநர்களின் நலனுக்காக எப்பொழுதும் உடன் இருப்பார்கள் எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) அமல்ராஜ் துணை ஆணையாளர்கள் திரு.சௌந்தரராஜன் (ஆயுதப்படை) திரு. கோபால்( மோட்டார் வாகன பிரிவு )மற்றும் ஆயுதப்படை காவல்
அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.