திண்டுக்கல் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்
10:01:2021 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளிபிரியா இ.கா.ப. அவர்கள் உத்தரவிட்டார்கள் அதன்படி மாவட்டத்தில் மொத்தம் 600 நபர்கள் கலந்து கொண்டனர் அதில் 54 நபர்களை தேர்வு செய்து காவல் துறையின் மூலம் 40 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு இன்று நிறைவு செய்யப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம்.எஸ்.முத்துசாமி இ. கா.ப அவர்கள் கலந்து கொண்டார் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார் இவ்விழாவில் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. A .G, இனிகோ திவ்யன் மற்றம் இவ்விழாவில் ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஊர்காவல்படை இணை அதிகாரி திரு. M.ஆனந்த ராஜ், ஆயுதப்படை ஆய்வாளர் திரு .சேரலாதன், ஊர்க்காவல் படை சரக தளபதி திரு.அஜய் கார்த்திக் ,வட்டார தளபதி திரு.அழகப்பன், துணை வட்டார தளபதி திரு.செந்தில்குமார், ஊர்க்காவல் படை சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பால்பாண்டி எழுத்தாளர் திரு. கார்த்திக் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர் விழா நடைபெறுவதற்கு உதவியாக ஊர்க்காவல் படை வீரர்கள் திரு. சூரியமூர்த்தி, திரு. குழந்தை இயேசு மற்றும் சிலர் உடன் இருந்தனர் இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. எம்எஸ்.முத்துச்சாமி இ கா.ப,அவர்கள் பணியில் இணைந்த ஊர்க்காவல் படை வீரர்களிடம் சில அறிவுரைகளை வழங்கினார் திண்டுக்கல் மற்றும் தேனி ஊர்க்காவல் படை வீரர்கள் மிக சிறப்பாக காவல்துறையுடன் இணைந்து சேவை செய்கின்றனர் என்று பாராட்டினார் பின் பயிற்சி பெற்ற ஊர்க்காவல் படை வீரர்கள் மென்மேலும் உயர்ந்த பதவிகளுக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். பயிற்சி அளித்த காவலர்கள் மற்றும் சிறப்பாக பயிற்சி செய்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்கினார். இவ்விழாவினை ஏற்பாடு செய்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்தார்