Police Recruitment

52 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கேரளாவிற்கு கடத்த முயன்ற ஆறு நபர்களை சுற்றி வளைத்து கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

52 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கேரளாவிற்கு கடத்த முயன்ற ஆறு நபர்களை சுற்றி வளைத்து கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

21:01:2021 தேனி மாவட்டம், கம்பம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பைபாஸ் சாலை பகுதியில் போதைப் பொருளான கஞ்சாவை கடத்தி வருவதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கம்பம் வடக்கு சார்பு ஆய்வாளர்
திரு.விஜய் ஆனந்த் அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் விரைந்து சென்று கம்பம்மெட்டு ரோடு, பைபாஸ் ரோடு சந்திப்புக்கு வடக்கு பக்கம் ரோந்து சென்ற போது அந்த இடத்தில் சந்தேகப்படும்படியாக இரண்டு கார்கள், இரண்டு இருசக்கர வாகனங்களில் இரண்டு வெள்ளை நிற மூட்டைகளை இருசக்கர வாகனத்தின் மேல் வைத்து நின்று கொண்டிருந்த 8 நபர்கள் காவல் துறையினரை கண்டவுடன் இரண்டு நபர்கள் மட்டும் அங்கு இருந்த இரண்டு கார்களை மட்டும் எடுத்து தப்பிச்செல்ல மற்ற ஆறு நபர்களை விசாரித்தபோது அவர்கள் கஞ்சா எனும் போதை பொருள் வைத்திருந்தது தெரிய வந்ததையடுத்து, அவர்கள் வைத்திருந்த 52 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து கம்பம் வடக்கு காவல்நிலையம் கொண்டு வந்து காவல் ஆய்வாளர் திரு.சிலைமணி அவர்கள் தலைமையிலான காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.தப்பிச் சென்ற இரண்டு நபர்களையும் காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
கஞ்சா கடத்திய குற்றவாளிகளை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்த தனிப்படையினரின் பணி சிறக்க திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப.,அவர்கள்,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப அவர்கள், தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.