Police Recruitment

மதுரை,மேல வடம்போக்கி தெருவில் பழமையான வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை,மேல வடம்போக்கி தெருவில் பழமையான வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி, திடீர் நகர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், மேல வடம் போக்கி தெரு, கூடலழகர் பெருமாள் கோவில் அருகே வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இவர் மதுரை டவுன்ஹால் ரோட்டில் மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரின் இந்த வீடு 1969 ம் ஆண்டு தரைத்தளத்துடன் இரண்டு மாடியுடன் கட்டப்பட்டுள்ளது, இந்த கட்டிடம் கட்டி 52 ஆண்டுகள் ஆனதால் இதை இடித்து விட்டு புதிதாக வீடு கட்ட வாசுதேவன் முடிவு செய்தார் இதற்காக இன்சினீயர் அய்யனார் என்பவரை அனுகினார், அவர் கருப்பையா என்ற கொத்தனார் தலைமையில், கட்டிடத்தை முழுமையாக இடிக்கும் பணியை தொடங்கினார் கடந்த 1 ம் தேதி அந்த கட்டிடத்தை இடிக்கும் பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர், திடீர்ரென்று கட்டிடத்தின் மேற்கு பகுதியில் இருந்த பக்கவாட்டு சுவர் சரிந்து பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதனால் கட்டிட இடிபாட்டில் சிக்கி தொழிலாளர்கள் அனைவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர் இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறை, மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு காவல் துறையினரும், திடீர் நகர் தீயணைப்பு துறை அதிகாரி வெங்கடேஷன் அவர்களின் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர், ஆனால் தொழிலாளர்கள் 4 பேர் மீது கட்டிட இடிபாடுகள் விழுந்து கிடந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. எனவே பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து கட்டிட இடிபாடுகளை அகற்றி அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர், அதில் மதுரை மாவட்டம், திருமங்கலம், கூடக்கோவில், பாரபத்தியை சேர்ந்த இருளாண்டி மகன் ராமன் வயது55/21, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, ஆவியூரை சேர்ந்த அம்மாசி மகன் சந்திரன் வயது.58/21, மதுரை, நரிமேடு பகுதியை சேர்ந்த ஜெயராமன்,ஆகிய மூன்று நபர்கள் இறந்த நிலையில் தீயணைப்பு படை வீரர்களால் மீட்கபட்டனர்.பின்னர் அவர்களது உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, தொடுவன்பட்டியை சேர்ந்த சின்னமாணிக்கம் மகன் மாணிக்கவாசகம் வயது 36, அதே பகுதியை சேர்ந்த ஆவியூர், தெற்கு தெரு, அச்சுராஜ் மகன் முனியசாமி வயது. 47/21, மதுரை மாவட்டம், திருமங்கலம், கூடகோவில், அய்யனார் தெருவை சேர்ந்த அழகுமலை மகன் அழகர்சாமி வயது 45/21, ஆகியோரை காயத்தோடு மீட்டனர். அவர்களையும் சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பபட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறை தென் மண்டல துணை இயக்குனர் விஜயகுமார் அவர்கள் மதுரை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி வினோத் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இரண்டு மாடி கட்டிடத்தை இடித்து விட்டு அதில் பக்கவாட்டு சுவர்களில் பீம் அமைக்கும் பணி நடந்து வந்துள்ளது. அப்போது மேற்கு பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் அப்படியே சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்ததில் 3 பேர் இறந்தது தெரிய வந்தது. இது குறித்து திடீர் நகர் C1, காவல் நிலையத்தில் காயம் அடைந்த மாணிக்கவாசகம் அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. ரவிச்சந்திரன் அவரகள் வழக்கு பதிந்து , மேற்படி வழக்கை ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.