விருதுநகர் மாவட்டம்:-
திருவில்லிபுத்தூரில் சாலைபாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு மாவட்ட நீதிமன்றத்தில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பாக இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி…
பெருகிவரும் வாகனத்தின் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது இதனால் எதிர்பாராத விபத்தும் நடக்கின்றது.
அதனை சீர்செய்யும் நோக்கில் திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் சார்பில் திருவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நிகழ்சியை ஏற்படுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி A.முத்துசாரதா அவர்கள் தலைமையிலும், திருவில்லிபுத்தூர் நகர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் தலைமையிலும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைத்த மாவட்ட தலைமை நீதிபதி திருமதி முத்துசாரதா அவர்கள் கெல்மட் அனிவதன் அவசியத்தையும் கெல்மட் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கப்படும் தொகையையும் எடுத்து கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மேலும் நீதி மன்றத்திற்கு முன்பு திருவில்லிபுத்தூர் – சிவகாசி சாலையில் தலைகவசம் அணிந்து சென்றவர்களை பாராட்டி கேடயம் மற்றும் இலவசமாக தலைகவசத்தை திருமதி முத்துசாரதா மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள் வழங்கினார்.
இந்த இருசக்கர வாகன விழிப்புணர்வு மக்கள் மத்தியில் தலைகவசத்தின் அவசியத்தையும் எடுத்துரைக்கும் விதம் இருந்தது.
இந்த பேரணியை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி முத்துசாரதா கொடியசைத்து துவக்கி வைத்தார் .
இந்த பேரணி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து துவங்கி நான்கு ரதவீதி , பேருந்து நிலையம், சின்ன கடை பஜார் வழியாக வந்து பைபாஸ் ரோடு சென்று மீண்டும் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவு செய்ய பட்டது.
இந்த பேரணியில் ஏராளமான பொதுமக்களும் போக்குவரத்து மற்றும் நகர் காவல் துறையினரும் அரசு போக்குவரத்து துறை ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியானது அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது,
மக்களின் நலனுக்காகவும் சமுதாய நலனை கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் கண்டுகளித்தனர்.
அத்துடன் முககவசம் அணிவது குறித்த விழிப்புணர்வும் நடைபெற்றது.
சாலை பாதுகாப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்கள்