தமிழ் நாடு காவல்துறையின் குதிரைப்படைப் பிரிவு, பற்றி தெரிந்து கொள்வோம்
குதிரைப்படைப் பிரிவு என்பது தமிழ்நாடு காவல்துறையில் உள்ள ஒரு காவல் பிரிவாகும். இப்பிரிவு தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாநகரங்களில் செயல்பட்டுவருகிறது. இக்குதிரைப்படையானது சட்டம் ஒழுங்கு, ஊர்வலப் பாதுகாப்பு பணி, விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை பாதுகாப்பு ரோந்து பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெரினாவில் குதிரைப்படை அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் காலையில் 8 குதிரைகள், மாலை 8 குதிரைகள் மெரினா பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்படுகின்றன. சென்னையில் கூடுதல் காவல் ஆணையர் மேற்பார்வையில், மோட்டார் வாகன பிரிவு துணை ஆணையர் மற்றும் ஒரு ஆய்வாளர் தலைமையில் குதிரைப்படை செயல்பட்டு வருகிறது. குதிரைப்படையில் ஒரு ஆய்வாளர் 30 காவலர்கள் உள்ளனர். சென்னை குதிரைப்படையில் 6 ஆண் குதிரை உட்பட 19 குதிரைகள் உள்ளன. இவர்கள் அல்லாது குதிரைகளை பராமரிப்பதற்கு காவல்துறையில் தனியாக ஆட்கள் உள்ளனர். ஒவ்வொரு குதிரையையும் அடையாளப்படுத்த தனி எண்ணும், பெயரும் வழங்கப்பட்டுள்ளது.