சட்டமன்ற தேர்தல்பணிக்காக முன்னாள் இராணுத்தினரை தென்காசி மாவட்ட கண்காணிப்பாளர் அழைப்பு
பல ஆண்டுகாலம் நம் நாட்டிற்காக சேவை செய்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களுக்கு மீண்டும் நம் நாட்டிற்கு சேவை செய்யும் ஒரு வாய்ப்பாக, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங் அழைப்பு விடுத்துள்ளார்
தமிழகமானது எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாமல் பாதுகாப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலமாக திகழ்வதற்கு காரணம் உங்களுடைய சேவையை ஆகும். இதே போல் இந்த ஆண்டும் எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாமல் பாதுகாப்பாக தேர்தல் நடைபெற அதிக அளவிலான முன்னாள் ராணுவத்தினர் அழைக்கப்படுகின்றனர். மேலும் தேர்தல் பணியில் பங்கு எடுத்துக் கொள்வது ஒவ்வொரு ராணுவ வீரர் உடைய ஜனநாயக கடமையும் ஆகும்.
இவ்வாறு தேர்தல் பணிக்காக வரும் முன்னாள் ராணுவத்தினரின் நலனை கருத்தில் கொண்டு உங்கள் இருப்பிடத்தின் அருகிலே தேர்தல் பணி அமைத்துத் தரப்படும். மேலும் வீண் அலைச்சல்கள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்துள்ளார். எனவே தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களும் தேர்தல் பணிக்காக தாங்களாக முன்வர வேண்டும்.
மேலும் கல்லூரி NSS மாணவர்கள்,NCC மாணவர்கள் இதனை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாக நினைத்து பலரும் ஆர்வமுடன் தேர்தல் பணியில் காவல்துறையினருடன் கலந்துகொண்டு நம் நாட்டின் சட்டமன்ற தேர்தல் எந்த ஒரு அசம்பாவித செயல்களும் நடைபெறாமல் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் நடைபெற நீங்கள் உதவ வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டுக் கொண்டுள்ளார்