மதுரை, ஜெய்ஹிந்துபுரம், மது கடையில் தகராறு செய்த ரவுடிகள் கைது. ஜெய்ஹிந்துபுரம் போலீசார் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகர், ஜெய்ஹிந்துபுரம் B6, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான சோலைஅழகுபுரம், இந்திரா நகர் 1 வது தெருவில் வசித்து வரும் அய்யனார் மகன் முத்துகுமார் வயது 29/21, இவர் ஒரு பர்னிச்சர் கடையில் வேலை பார்த்து வருகிறார், இவர் கடந்த 14 ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6 மணியளவில் ஜெய்ஹிந்துபுரம் ராமையா தெருவிலுள்ள் அரசு மதுபாணக்கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார் அது சமயம் அவரை அழைத்து செல்ல அவரது அக்காள் மகன் மணிகண்டன் என்பவரும் காஜாமைதீன்அஜீஸ் என்பவரும் அங்கு வந்து அவரை அழைத்துக் கொண்டு வெளியே வந்த போது அங்கே சிவக்குமார், சிவனான்டி, கார்த்தி, ஆறுமுகம் ஆகியோர் வழியை மறித்து நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள், அப்போது காஜாமைதீன் அஜீஸ் நாங்கள் போக வேண்டும் வழி விடுங்கள் என்று கேட்டதற்கு, சிவகுமார் ஏன்டா தேவடியா மகன்களா விலகி போகமுடியாதா என கூறி அசிங்கமாக திட்டி, கைகளால் அடித்தும், கைகளால் குத்தியும் காயப்படுத்தினர் மேலும் சிவனான்டி, சிவகுமாரிடம் இவர்களை எதையாவது எடுத்து போடுடா அப்பத்தான் நம்மள எதிர்த்து பேச மாட்டானுக என கூற சிவகுமார் கல்லை எடுத்து தலையில் அடித்து இரத்தகாயத்தை ஏற்படுத்தினான், அதன் பின் சிவனான்டி , முத்துகுமார் பையில் இருந்த மொபைல் போனை பிடிக்கினான், அதை பார்த்த முத்துகுமார் தம்பி மணிகண்டனும், காஜாமைதீன்அஜீஸும் அதை தடுத்தனர், இதனால் கோபமடைந்த கார்த்திக், ஆறுமுகம் ஆகியோர் அவர்களை அடித்து சட்டையை கிழித்து கல்லால் அடிக்க ஆரம்பித்தனர் உடனே அக்கம் பக்கத்திலுள்ளோர் வந்து தடுக்கவே இவர்களுக்கு கொலை மிரட்டல் விட்டு தப்பி ஓடி விட்டனர், அதன் பின் அரசு மருத்து மனைக்கு சென்று சிகிச்சை பெற்று மறு நாள் ஜெய்ஹிந்துபுரம் B6 காவல்நிலையம் வந்து புகார் அளித்தனர், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு.C.சேதுமணிமாதவன் அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. U.வெற்றிவேல் அவர்கள் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.