காவல்துறை சிறப்பாக செயல்பட!!!
ஒரு லட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் சட்டம்–ஒழுங்கைப் பராமரிக்க 222 காவல் துறையினர் இருக்க வேண்டும் என்பது ஐ.நா.வின் பரிந்துரை.
ஆனால், இந்தியாவில் 131 காவலர்கள்தான் இருக்கிறார்கள். காவலர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் புலன்விசாரணைக்கும், ரோந்து பணிக்கும் போதுமான காவலர்கள் அனுப்பப்படுவது இல்லை. அதனால், காவல்துறையின் அடிப்படை கடமையான சட்டம்– ஒழுங்கைப் பராமரித்தல், குற்றத்தடுப்பு பணிகள் போன்றவை பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. மேலும், தினசரி பணியைக் கவனிக்கப் போதுமான காவலர்கள் இல்லாததால், காவல் துறையினரின் பணிச்சுமை அதிகரிக்கிறது. அதன் காரணமாக, காவலர்களின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு, பொது மக்களிடம் தங்களது கோபத்தை அவ்வப்பொழுது வெளிப்படுத்துவதாக உளவியல் ஆய்வு ஒன்று தெரியப்படுத்துகிறது’ – என்பது சமீபத்தில் வெளியான செய்தி.
காவலர்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துவிட்டால், நாட்டில் தினசரி நடைபெறும் குற்றங் கள் கணிசமான அளவுக்குக் குறைந்து விட வாய்புண்டு சட்டம்–ஒழுங்கு சீரான முறையில் இருக்க காவலர்கள் பற்றாகுறையை சரி செய்ய வேண்டும் என்பது நமது கருத்துக்களில் ஒன்றாகும்