Police Recruitment

மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்

மருத்துவ சிகிச்சை பெற்ற 11 காவலர்களுக்கான மருத்துவ உதவி தொகை மற்றும் +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற காவல் ஆளினர்களின் 6 குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவி தொகையினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் வழங்கினார்

சென்னை பெருநகர காவலில் பணி புரியும் காவல் ஆளினர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயர் மருத்துவ சிகிச்சை அல்லது மருத்துவ சிகிச்சை பெற்றால் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கு செலவு செய்த தொகை பரிசீலனைக்கு பிறகு தமிழ் நாடு காவல் சேம நல நிதியிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதன்பேரில் சமீபத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று மேற்படி மருத்துவ உதவி தொகைக்கு விண்ணப்பித்திருந்த 11 காவல் ஆளினர்களுக்கு மருத்துவ உதவி தொகைக்கான காசோலைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் இன்று 09/04/21 காலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இன்று வழங்கப்பட்ட 11 காவல் ஆளினர்களுக்கான மருத்துவ உதவி தொகை மொத்தம் ரூ. 19, 92,228/−ஆகும். மேலும் சென்னை பெருநகரில் பணி புரியும் காவல் ஆளினர்களின் பிள்ளைகளின் 2019−2020 கல்வியாண்டில், +2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த தற்போது கல்லூரியில் பயின்று வரும் 6 மாணவ மாணவியருக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை காவல் ஆணையாளர் அவர்கள் இன்று வழங்கினார். 6 மாணவ மாணவியருக்கான கல்வி உதவி தொகை மொத்தம் ரூ. 1, 31,520/− ஆகும்.

இந் நிகழ்ச்சியில் காவல் இணை ஆணையாளர்(தலைமையிடம்) திருமதி. எஸ். மல்லிகா IPS. துணை ஆணையாளர்கள் திரு.பெரோஸ்கான் அப்துல்லா(நிர்வாகம்), திரு. அதிவீரபாண்டியன் (தலைமையிடம்) மற்றும் காவல் அதிகாரிகள் காவல் ஆளினர்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.