ஆலந்தூர், சென்னை புறநகர்் பகுதிகளில் சமீப காலமாக பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு சினிமா பாடலுக்கு ஏற்றார்போல் போஸ் கொடுப்பதும், பிறந்தநாளில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதும், அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பி வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் தங்களை பெரிய ரவுடிகளாக சித்தரித்து கொள்கின்றனர். இந்தநிலையில் வாலிபர் ஒருவர், கையில் பட்டாக்கத்தியை வைத்துக்கொண்டு தன்னை மிகப்பெரிய ரவுடியை போல் சித்தரித்து, “நாக்கை அறுப்பேன்” என்று சினிமா பாடலுக்கு ஏற்ப […]
Author: policeenews
ஆந்திராவில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு கஞ்சா கடத்த முயன்ற 7 வாலிபர்களை போலீசார் மடக்கி கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று ஆரம்பாக்கம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த மோட்டார் சைக்கிளில் இருந்த மொத்தம் 1 கிலோ 200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களை ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. […]
காஞ்சீபுரம் அருகே செல்போன் கடையில் உதிரிபாகங்கள் மற்றும் செல்போன் திருடிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம், காஞ்சீபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளைகேட் என்ற இடத்தில் உள்ள செல்போன் உதிரிபாகங்கள் விற்கும் கடையில் உரிமையாளர் ஐயப்பன், அவரது மனைவியுடன் விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 ரவுடிகள் செல்போன் உதிரிபாகங்கள் வாங்குவது போல் நோட்டமிட்டு, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஐயப்பனை தாக்கினர். உடனடியாக அவர்கள் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால் அந்த 2 ரவுடிகளும் கடையில் இருந்த செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் ரூ.30 […]
தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது
தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டவர் கைது திருநெல்வேலி மாவட்டம் 05.10.2020 பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவகாமி புரத்தில் உள்ள கோவிலில் வரி செலுத்துவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினையில், சிவகாமிபுரத்தைச் சேர்ந்த குமரேசன்(31) என்பவரிடம், அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (35), மற்றும் முக்கூடல் பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த கொம்பன் @ குமார் (29) ஆகியோர் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் அடிப்படையில் […]
எஸ்.ஐ. தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிட ஐகோர்ட் தடை
எஸ்.ஐ. தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிட ஐகோர்ட் தடை சென்னை: எஸ்.ஐ தேர்வு இறுதிப்பட்டியலை வெளியிட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. தேர்வு பட்டியலை முடிவு செய்யவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் எஸ்.ஐ தேர்வு கடந்த ஜனவரி 12,13ல் நடைபெற்றது. கடலூர், வேலூர் உள்ளிட்ட குறிப்பிட்ட மையங்களில் படித்து தேர்வு எழுதியோர் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். புதிதாக எஸ்.ஐ பணிக்கு தேர்வு நடத்த […]
ஆடு திருட்டில் ஈடுபட்டு, தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.
ஆடு திருட்டில் ஈடுபட்டு, தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது. திருநெல்வேலி மாவட்டம் 05.10.2020 திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலப்பாட்டம் பெருமாள் சன்னதி தெருவைச் சேர்ந்த நாகராஜன்(30) என்பவர் வீட்டில் உள்ள ஆடுகளை, மேலப்பாட்டம் முப்பிடாதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மாரியப்பன்@ மாவட்ட மாரியப்பன்(38) திருட முயற்சித்து, நாகராஜனிடம் தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் அடிப்படையில் தாலுகா காவல் நிலைய […]
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது;
காய்கறி லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது; நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ்பட்டாம்பாக்கம் பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த லாரியை சோதனையிடுமாறு போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சுதாகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் […]
கடனை தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர் கைது.
கடனை தராததால் பெண்ணை ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தவர் கைது. திருவள்ளூர் அருகே வாங்கிய கடனை திருப்பித் தராததால் ஆத்திரம் அடைந்த நிலையில் பெண்ணிடம் இருந்த நகையை பறித்துக் கொண்டதோடு ஒரு நாள் முழுவதும் ஆடையின்றி வீட்டிற்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் குறித்து தனியார் நிறுவன பணியாளரை மணவாளநகர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதற்கு தாரமல் காலதாமதம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பணத்தை […]
சென்னையில் தொடர் புல்லட் பைக் திருட்டில் தனிபடையினரின் அதிரடி
சென்னையில் தொடர் புல்லட் பைக் திருட்டில் தனிபடையினரின் அதிரடி சென்னையின் பல்வேறு பகுதிகளில் தொடர் இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக காவல் ஆணையர் Tr.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்களது உத்தரவில் கூடுதல் ஆணையர் Tr. தினகரன் IPS., அவர்களது மேற்பார்வையில் சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் Tr. சுதாகர் IPS., அவர்களின் தலைமையில் அவரது தனிப்படையினர் SI.சுதாகர் , தலைமை காவலர் Tr. சரவணகுமார் ( HC 26286) கடந்த 06.08.20 அன்று […]
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர்
விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய காவல் உதவி ஆய்வாளர் . மதுரை மாவட்டம் விமான நிலைய பாதுகாப்பு பணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் திரு .பாபு அவர்கள். கடந்த மாதம் திரு.மகாராஜன் என்ற காவலர் எதிர்பாராத விதமாக ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவருக்கு உதவும் வகையில் தன்னுடைய ஒரு மாத ஊதியம் 48,922 ரூபாய் பணத்தை அப்படியே அவரின் குடும்பத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் இந்த தீபாவளி துக்கதீபாவளியாக அனுசரித்து […]










