பணியிடைநீக்கம்; 2 ஆண்டுகள் வழக்கு!’ – இளம்பெண் தற்கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட தஞ்சை இன்ஸ்பெக்டர் இந்த வழக்கிலிருந்து விடுதலையாகி மீண்டும் காக்கி உடை உடுத்துவேன் என சேதுமணி மாதவன் தனது நண்பர்களிடம் கூறுவார். தஞ்சாவூரில் அகிலா என்ற இளம் பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இன்ஸ்பெக்டர் சேதுமணி மாதவன் மீது குற்றம் சுமத்தப்பட்டதுடன் விசாரணையில் அவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. தற்போது இந்தத் தண்டனை ரத்து செய்யப்பட […]
Author: policeenews
ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! – வீடியோ என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஆபாச படம் பார்த்தவர்களின் மொத்த லிஸ்ட்டும் ரெடியாம்! – வீடியோ “யாரெல்லாம் ஆபாச வீடியோவை பார்த்தார்கள், எத்தனை மணிக்கு பார்த்தார்கள், அதை யாருக்கெல்லாம் ஷேர் செய்தார்கள், அவர்களின் செல்போன் நம்பர், ஐபி நம்பர் என்ன என்ற லிஸ்ட் எடுத்துவிட்டோம்… மொத்த பேரும் கைதாவார்கள்.. 3 முதல் 7 வருஷம் வரை இவர்களுக்கு ஜெயில் உறுதி” என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
ஒருமாதங்களில் 10 சவரன் நகை ஐந்து செல்போன் சொகுசு வாழ்க்கை!’ – காஞ்சியை அதிரவைத்த திருடன்
காஞ்சிபுரம் ஐயப்பாநகர்,அதியமான்நகர்,காந்திநகர்,திருபருத்திகுன்றம் சாலை,பல்லவநகர், உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ளவீடுகளில் இரவு நேரங்களில் நகை மற்றும் செல்போன் அடிக்கடி திருடு போவது வாடிக்கையாக இருந்தது. தொடர்ந்து திருட்டு நடப்பதால் அதற்கான வழக்குகள் கூடிக்கொண்டேபோக போலீஸார் வழக்கு விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக விசாரிக்க காஞ்சிசரக டி.ஜ.ஜி, திருமதி.தேன்மொழி அவர்களின் ஆலோசனையின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா சாமுண்டீஸ்வரி அவர்களின் உத்தரவில் ஏ.டி.எஸ்.பி பாலசந்தர் அவர்களின் மேற்பார்வையில் டி.எஸ்.பி. கலைச்செல்வன் காஞ்சிதாலுக்கா காவல்ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் தனிப்படை […]
சென்னை கீழ்பாக்கம் மற்றும் புளியந்தோப்பு பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் ஆய்வு செய்து மழைநீர் அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் 01.12.2019 அன்று காலை, சென்னையில் கீழ்பாக்கம் கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை மற்றும் புளியந்தோப்பு ஜீவா இரயில் நிலைய இரயில்வே சுரங்கப்பாதை பகுதிக்கு சென்று ஆய்வு செய்து, காவல் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மழைநீரால் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் உள்ள மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்தி வாகனங்கள் சீராக செல்ல அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதிகளிலுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனுக்குடன் சரி செய்து நிவாரணப் […]
அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வாலிபரை கொலை செய்த குற்றவாளிகளை வெளிமாநிலம் சென்று கைது செய்த தனிப்படை காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.
சென்னை, வியாசர்பாடி, பெரியார் நகரில் வசித்து வந்த பிரபாகரன் வ/27, த/பெ. ஆனந்தன் என்பவர் கடந்த 10 வருடங்களாக அம்பத்தூர், அத்திப்பட்டு பகுதியில் ஓம் பிளாஸ்டிங் & கோட்டிங் என்ற பெயரில் இரும்பு வெல்டிங் செய்யும் கம்பெனியை நடத்தி வந்துள்ளார். கடந்த 22.11.2019 அன்று காலை 10.30 மணியளவில் பிரபாகரன் வழக்கம் போல் கம்பெனிக்கு சென்றவர் இரவு வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது தந்தை ஆனந்தன் பிரபாகரனை போன் மூலம் தொடர்பு கொண்டபோது போனை எடுக்காததால் […]
தமிழ்நாடு காவல்துறைவினருக்கு DGP திரிபாதி அவர்களின் சுற்றறிக்கை
தமிழ்நாடு காவல்துறைவினருக்கு DGP திரிபாதி அவர்களின் சுற்றறிக்கை அண்மையில், ஹைதராபாத் அருகில் கால்நடை பெண் மருத்துவரை லாரி ஓட்டுநர்கள் சிலர் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் என்பது, உதவி கோரி வரும் அழைப்புகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய விழிப்பு மிக்க, உறுதியான செயல்பாடுடைய கட்டமைப்பின் அவசியத்தை காவல்துறைக்கு நினைவூட்டுகிறது. சம்பவம் நடந்த பின்னர் எடுக்கக்கூடிய நடவடிக்கைகளினால் எந்தப் பயனும் ஏற்படாது. அனைத்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கீழ்க்காணும் […]
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், கடந்த 20.11.2019 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் திரு.பழனிகுமார் அவர்களின் மனைவி திருமதி.விமலா அவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.22.07 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், கடந்த 20.11.2019 அன்று சாலை விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் திரு.பழனிகுமார் அவர்களின் மனைவி திருமதி.விமலா அவர்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை மூலம் திரட்டப்பட்ட நிதி ரூ.22.07 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தர வேண்டும்: சென்னை காவல் ஆணையர் அறிவுரை
சட்டம், ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப் போது பெண்களின் பாதுகாப் புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறி வுரை வழங்கியுள்ளார். குண்டர் சட்டம் கொலை, கொள்ளை, வழிப் பறி உட்பட அனைத்து வகை யான குற்ற செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வ நாதன் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தொடர் […]
`5000 பக்க அறிக்கை; அடுத்தவாரம் அதிரடி!’- குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரத்தில் களமிறங்கும் போலீஸ்
`5000 பக்க அறிக்கை; அடுத்தவாரம் அதிரடி!’- குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரத்தில் களமிறங்கும் போலீஸ் தமிழகத்தில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களைப் பார்த்தவர்களின் பட்டியல் தயாராக உள்ளது. அடுத்த வாரத்திலிருந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ரவி நம்மிடம் தெரிவித்தார். அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (Federal Bureau Of Investigation), மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது. அதில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள், படங்கள் அதிகம் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, […]
கடல் கொந்தளிப்பிலும் தொடரும் கடத்தல்!- ராமேஸ்வரம் போலீஸுக்கு அதிர்ச்சி
கடல் கொந்தளிப்பிலும் தொடரும் கடத்தல்!- ராமேஸ்வரம் போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பீடி இலை மூட்டைகள் தொடர் மழை பெய்து வந்ததுடன் கடல் கொந்தளிப்பு நிலவி வந்தது. இந்த நிலையில், தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரைப் பகுதியில் பீடி சுற்றப் பயன்படும் பீடி இலைகள் மூட்டை மூட்டையாக கரை ஒதுங்கின. இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 400 கிலோ பீடி இலைகள் தங்கச்சிமடம் அருகே கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து […]